தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/வீட்டில் துளசி வளர்ப்பது நல்லது

வீட்டில் துளசி வளர்ப்பது நல்லது

வீட்டில் துளசி வளர்ப்பது நல்லது


PUBLISHED ON : டிச 20, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 20, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரும்பாலான வீடுகளிலும், கோவில்களிலும் முற்றத்தில் துளசி செடி மாடத்தை பார்த்திருக்கலாம். கோவில் முற்றங்களில் கூட வளர்க்கும் அளவுக்கு, அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா துளசி செடி?

தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். இதில் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக, ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலத்தையே, சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனாலேயே பல வீடுகளில், துளசிச் செடியை வளர்த்து வருகின்றனர். அதிகாலை வேளையில் அதைச் சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர்.

அதிகாலை மூன்று மணி முத்ல், ஐந்து மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். இந்த வேளையில் தான், இய்ற்கையின் அத்தனை அம்சங்களும் மிகவும் புதிதாகச் சுத்திகரிக்கப்பட்டதைப் போல் இருக்கும். அதாவது இந்த நேரத்தை தான் ஓசோன் அதிகமிருக்கும் நேரம் என்கின்றனர் அறிவிய்ல் அறிஞர்கள். இயற்கையாகவே, காற்றில் ஆக்ஸிஜன் அதிகமாக இருக்கும் நேரமான அதிகாலை வேளையில், துள்சிச் செடியைச் சுற்றி வந்தால் பரிசுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்கலாம் என்பது இதன் சாராம்சம்.

அதாவது எல்லா ஜீவராசிகளும் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசித்து, ஆரோக்கியமாக வாழ் வேண்டும் என்ற நோக்கத்தில், துளசி மடத்தை சுற்றி வரும், பழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மருத்துவத்திலும் துளசிக்கு மிக முக்கிய் இடம் உண்டு. துளசி இல்லாத ஆயுர்வேத் மற்றும் சித்த மருத்துவமே கிடையாது. குழந்தைகளின் சளி, இருமல் பிரச்னைகளுக்கு, துளசி போல் சிறந்த மருந்து கிடையாது. துளசி இலைகளை நசுக்கி பிழிந்து, இஞ்சிச்சாறு, தேனுடன் கலந்து கொடுத்தால், நெஞ்சு கபம் காணாமல் போய் விடும்.

இப்படிப்பட்ட அற்புதச் செடியை கண்டறிந்து, அதன் பலனை அனைத்து மக்களும், ஆழ்மாக அனுப்விக்க வேண்டும் என்பதற்காக, ஒரு வழிபாட்டு சம்பிரதாயமாகவே பின்பற்றப்படுகிறது. துளசியை கிழக்கு திசையில், தரைமட்டத்தில் வைத்தால், பெண்களின் ஆரோக்கியம் நன்கு அமையும். வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நற்பலனே. துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக்கூடாது.

ஆண்டு முழுவதும், பசுமையாக இருக்கும் மரங்களை வைத்து, வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும். இலை உதிர்க்கும் மரங்கள் ஓரளவுதான் நற்பலனை கொடுக்கும். சில மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய மரங்களை வளர்க்காமல் இருப்பது நல்லது. கூர்மையான ஊசியிலை கொண்ட காட்டு மரங்களை, வீட்டைச் சுற்றிலும் வளர்க்கக்கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us