PUBLISHED ON : டிச 23, 2015

* பிறந்த நொடியிலிருந்து இறக்கும் கடைசி நிமிடம் வரை, நம் உடல்  உறுப்புகளுக்கு அதிமுக்கியமான ஆக்ஸிஜனை வழங்கி கொண்டிருப்பது நுரையீரல்
* சுவாசக் குழாயில் இணைக்கப்பட்டு மார்புக்கூட்டினுள், பக்கத்துக்கு ஒன்றாய்  வலது, இடது நுரையீரல்கள் என்ற பெயருடன் பொருத்தப்பட்டிருக்கின்றன, இந்த  காற்றுப் பைகள்
* உடல் உறுப்புகளிலேயே மிகவும் எடை குறைந்த உறுப்பு நுரையீரல் தான். இதில் பல கோடி காற்று நுண்ணறைகள் உள்ளன 
* 80 வயதாகும் நபர் தன் வாழ்நாளில், 60 கோடி முறை சுவாசித்திருப்பார்
* நுரையீரல் பழுதுபட்டால் சரி செய்வது மிகவும் கடினம். பல காரணங்களால் அது பாதிக்கப்பட்டாலும், சிகரெட் தான் அதன் முக்கிய எதிரி 
* தன்னம்பிக்கை இருந்தால் புகைபிடிப்பதை எளிதாக கைவிடலாம்
* சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் போதெல்லாம், சிறிது நேரம் கழித்து பிடிக்கலாம் என்று ஒத்திப் போடுங்கள்
* சிகரெட் பிடிக்க தோன்றும் போது, உங்கள் குழந்தையின் புகைப்படத்தை  பாருங்கள். அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற நாம் அவசியம் என்ற எண்ணம்  வரும். தானாக சிகரெட் குப்பைத் தொட்டிக்கு போகும்
* சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும் போது, கவனத்தை திசை திருப்ப, பிடித்த பாடலைக் கேட்கலாம் அல்லது வீடியோ கேம் விளையாடலாம்
* சிகரெட் பிடிக்க ஆசை வரும் போது கடகடவென, இரண்டு, மூன்று டம்ளர்கள் தண்ணீர் குடிக்கலாம்
* மருத்துவர் பரிந்துரையின் பேரில், மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்
* அடிக்கடி மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். உட்கார்ந்த இடத்திலேயே, 10 முறை நன்றாக மூச்சை உள் இழுத்து வெளிவிடுங்கள்.
க. பிரபாகரன், நெஞ்சக மருத்துவர். மதுரை

