PUBLISHED ON : மே 01, 2020

எலும்பு தேய்மானம், எலும்பு திசுக்களில் பலவீனம் போன்ற பல காரணங்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இருந்தால், எலும்பு உடையும் அபாயம் அதிகம் உள்ளது. குறிப்பாக, எலும்பு உடைவதற்கான அபாயம், இடுப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் உள்ளது. இதை சரி செய்வதற்கு, பல நேரங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.தற்போது, வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்வதோ, மருத்துவ உதவி பெறுவதோ சற்று சிரமம். இதை தவிர்ப்பதற்கு, வருமுன் காத்துக் கொள்வது ஒன்று தான் சிறந்தது.வீட்டிலேயே சில முன் ஏற்பாடுகளை முதியவர்களுக்கு செய்து தர வேண்டும்.
* நடக்கும் போது, 'வாக்கர்' அல்லது ஊன்றுகோல் உதவியுடன் நடக்க வேண்டும். பலவீனமாக இருப்பவர்கள், எந்த ஆதாரமும் இல்லாமல் நடக்க கூடாது
* உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி, எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க, தினசரி உணவில் காய்கறி, பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, விட்டமின் சி அதிகம் உள்ள கொய்யா, நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு பழங்கள் சாப்பிட வேண்டும்
* தினமும், 15 நிமிடங்கள் வெயிலில் இருப்பது, விட்டமின் சி அதிகரிக்க உதவும்.
டாக்டர் விஜயகுமார். எஸ், எலும்பியல் நிபுணர், சென்னை
