எண்ணெயில் பொரித்த "ஸ்நாக்ஸ்'களை தவிர்ப்பது அவசியம்
எண்ணெயில் பொரித்த "ஸ்நாக்ஸ்'களை தவிர்ப்பது அவசியம்
PUBLISHED ON : செப் 04, 2011
எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து 4 ஆண்டுகளாகிறது. கடந்த 2 மாதங்களாக சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சுவலி ஏற்படுகிறது. நான் என்ன செய்வது? எஸ்.சீனிவாசன், மதுரை
இருதயத்தில் உள்ள ரத்தநாளத்தில் ஏற்படும் அடைப்பை ஆப்பரேஷன் மூலம் சரிசெய்வதே பைபாஸ் சர்ஜரி. இதில் நெஞ்சில் இருந்தோ, கை, கால்களில் இருந்தோ ரத்தநாளத்தை எடுத்து இருதயத்தில் பொருத்தப்படுகிறது. நெஞ்சில் இருந்து பெறப்படும் ரத்தநாளத்திற்கு, 'ஃடிட்ச் எணூச்ஞூt' என்றும், கையில் இருந்து பெறப்படும் ரத்தநாளத்திற்கு 'கீச்ஞீடிச்டூ எணூச்ஞூt' என்றும், காலில் இருந்து பெறப்படும் ரத்தநாளத்திற்கு 'குச்ணீடஞுணணிதண் ஙஞுடிண எணூச்ஞூt' என்றும் பெயர். இதில் லீமா கிராப்ட் பொருத்தியவருக்கு 20 ஆண்டுகள் கழித்தும் 90 சதவீதம் கிராப்டில் அடைப்பு ஏற்படாமல் இருக்கும். ஆனால் 'வெயின் கிராப்ட்' பொருத்தியவருக்கு 10 ஆண்டுகளில் கிராப்டில் 50 சதவீதம் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே எந்த கிராப்ட் பொருத்தப்பட்டது என்பதை பொறுத்தே பைபாஸ் சர்ஜரியின் நீண்டகால பலன் அமையும். இதுதவிர இருதயத்தில் உள்ள ரத்தநாளத்தில் பிறஇடங்களில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பைபாஸ் சர்ஜரி செய்துவிட்ட பிறகு வாழ்வியல் மாற்றம், முறையான உணவுப் பழக்கம், மனதை நிம்மதியாக வைப்பது, தினசரி நடைப்பயிற்சி, வேளை தவறாமல் மருந்து எடுப்பது அவசியமாகும். உங்களுக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து கிராப்ட்டில் அடைப்பு உள்ளதா அல்லது பிற இடத்தில் அடைப்பு உள்ளதா என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். தற்போது இதற்கு நவீன ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சைகள் உள்ளன. இதில் புதிய அடைப்பையோ அல்லது பொருத்தப்பட்ட கிராப்டில் உள்ள அடைப்பையோ எளிதில் நீக்க முடியும்.
எனக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. புகைப் பழக்கத்தை நிறுத்திவிட்டேன். ஆனால் வடை, முறுக்கு போன்ற 'ஸ்நாக்ஸ்' பழக்கத்தை தொடர்ந்து எடுத்து வருகிறேன். இது தவறா?
ஆர்.ஜோசப்ராஜன், திண்டுக்கல்
புகைப் பழக்கத்தை நிறுத்துவதே உங்கள் இருதய நலனுக்கு நீங்கள் எடுக்கும் முதற்கட்ட நடவடிக்கை. வடை, முறுக்கு, பஜ்ஜி, மிக்சர் போன்றவை இருதயத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துபவை. உணவுப் பழக்கத்தில் எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அறவே தவிர்ப்பது முக்கியம். நம் இந்திய உணவுப் பழக்கத்திலேயே மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை இந்த எண்ணெயில் பொரித்த உணவு வகைகள்தான். எனவே ஆரோக்கியமான 'ஸ்நாக்ஸ்'-க்கு பழவகைகள், அவித்த உணவு வகைகளே சிறந்தது.
எனது தாயாருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு 'கச்ஞிஞு Mச்டுஞுணூ' கருவி பொருத்தப்பட்டது. தற்போது நலமுடன் உள்ளார். ஆனால் இதுவரை எந்தவித பரிசோதனையும் செய்து கொள்ளவில்லை. இது சரியா?
கி. முருகானந்தன், ராமநாதபுரம்
இருதயத்தில் உள்ள மின்னோட்டத்தில் தடை ஏற்படும்போது பொருத்துவது, 'பேஸ் மேக்கர்' கருவி. பொதுவாக இக்கருவியில் உள்ள 'பாட்டரி' 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். இருந்தாலும் அவசியம் ஆண்டுக்கு ஒருமுறை பேஸ்மேக்கர் கருவியை பரிசோதிக்க உங்கள் இருதய டாக்டரிடம் செல்வது அவசியம். இதில் உங்கள் டாக்டர் பேஸ்மேக்கர் கருவியை செக்கப் செய்வதுடன், ரத்தம், சிறுநீர், எக்கோ பரிசோதனை செய்து, உங்கள் இருதய ஆரோக்கியம் எப்படி உள்ளது என அறிந்து, அதற்கு தேவையான மருந்தை வழங்குவார்.
எனது நண்பர் ஒருவர் பணியில் உள்ள 'மனஅழுத்தத்தால்' (ஸ்ட்ரெஸ்) நான்கு நாட்களாக சரியாக தூங்கவில்லை. அவரது ரத்தஅழுத்தம் 150/100 என்றளவில் உள்ளது. இதற்கு மருந்து எடுத்தாக வேண்டுமா?
கே. பிரதீப், தேனி
ரத்தக் கொதிப்பு என்பது ஒரு வாழ்க்கை முறை வியாதி. நார்மலாக ஒருவரது ரத்தஅழுத்தம் 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். இதற்கு உணவுக் கட்டுப்பாடு, தினமும் நடைப்பயிற்சி மற்றும் மனநிம்மதி மிகவும் அவசியம். தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி தூக்கம் குறைந்தால் ரத்தஅழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவர் முதலில் மனஅழுத்தம் இன்றி இருப்பது அவசியம். அத்துடன் தினமும் சராசரி 7 மணி நேரம் தூக்கமும் தேவைப்படுகிறது. இவற்றை சரிசெய்து, 2 வாரங்கள் கழித்தபின் ரத்தஅழுத்தத்தை சரிபார்த்து, அப்போதும் கூடுதலாக இருந்தால் அவசியம் மருந்து தேவைப்படும். மனஅழுத்தமும், தூக்கமின்மையும் நேரடியாக ரத்தஅழுத்தத்தை பாதிக்கும் தன்மை படைத்தவை.
-டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை
