தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஆயுர்வேதம்: இளம் பெண்ணுக்கு வந்த தீவிர வாதநோய்

ஆயுர்வேதம்: இளம் பெண்ணுக்கு வந்த தீவிர வாதநோய்

ஆயுர்வேதம்: இளம் பெண்ணுக்கு வந்த தீவிர வாதநோய்


PUBLISHED ON : செப் 04, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் ஒரு மாபெரும் மருத்துவக் கல்லூரியின், முதலாம் ஆண்டு மாணவி மாலினி, 19. அவருக்கு, வலது கையால் எழுத இயலாமலும், உடலில் இருந்த தீவிர வலியால், படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும் இருந்தது. மருத்துவக் கல்லூரியில், எல்லா பரிசோதனைகளும் செய்யப்பட்டன. அவளுக்கு மனக்கோளாறு எனக் கூறினர். அவருக்கு, 2007ம் ஆண்டு, சிக்-குன்-குனியா காய்ச்சல் வந்தது. பின், கைமூட்டு வலி ஏற்பட்டது; உடல் மரத்துப் போனது. எழுத முயன்றால், கழுத்து வரை தீவிரமாய் இழுத்தது. விரல்களில், தசை பிடிப்பு வலியும் ஏற்பட்டது. கை விரல்களில் வீக்கம், நீண்ட நேரம் அமர்ந்தால், முதுகுவலி. சென்னையிலுள்ள, பல பெரிய மருத்துவமனைகளில் ஆலோசனைகள் நடந்தன. எம்.ஆர்.ஐ., மற்றும் எக்ஸ்-ரே ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன.



சி4, சி5 எலும்புகளில் வீக்கம் தென்பட்டது. ஒரு நரம்பியல் மருத்துவர், 'Nerve Conduction' சோதனையை அறிவுறுத்தினார். உடல் முழுவதும் எம்.ஆர்.ஐ., செய்யப்பட்டது. எதனாலும், தெளிவாக அந்த நோயைப் பற்றியோ, அது ஏற்படக்கூடிய காரணங்களைப் பற்றியோ தெரியவில்லை. கடந்த 2009ம் ஆண்டு, புகழ்பெற்ற மருத்துவரின் கணிப்பில், சிக்-குன்-குனியாவால் வந்த மூட்டழற்சி மற்றும் மென் திசுக்களில் வலி கண்டறியப்பட்டது. மேலும், அவளுக்கு ரியாக்டிவ் ஆர்த்ரிட்டிஸ் தாக்கியுள்ளதாகவும், Rheumatoid factor, ASO factor ஆகியவை, நெகடிவ் ஆக உள்ள ஒரு நிலை என்றும் எடுத்துரைத்தார்.



இந்த வியாதிக்கு, அலோபதி மருத்துவத்தில் சிகிச்சை எதுவும் இல்லை. இதற்கு தற்காலிகமாக, ஸ்டெராய்டு மருந்துகள், வலி கொல்லி மாத்திரைகள், இந்த மருந்துகளால் உருவாகும் வயிற்றுக் கோளாறுகள் சரிகட்ட மாத்திரைகள், HCQS எனும் மருந்தும் கொடுக்கப்பட்டன.



HCQS மருந்து, பார்வையை பாதிக்கும் சக்தி வாய்ந்தது என்பதால், அவருடைய பார்வை சக்தியை கண்காணிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். இத்துடன் ஊட்டச்சத்து, சுண்ணாம்புச்சத்து மருந்துகளும் கொடுக்கப்பட்டன. ஒரு மாதத்திற்கு பின், வலிகள் குறைந்த போதிலும், உடல் தளர்ச்சி ஏற்பட்டது. மூன்று மாதத்திற்கு பின், வேறு ஒரு வலி கொல்லி மருந்தும், கவலை அகற்றும் மருந்துகளும் கொடுக்கப்பட்டன. மருத்துவப் படிப்புக்குச் சேர்ந்த அப்பெண்ணால், எழுத முடியாத காரணத்தால், படிப்பை விட்டு விலகினார். சஞ்சீவனி மருத்துவ மையத்திற்கு மாலினி வந்த போது, அவர் உடலில், எங்கு அழுத்தினாலும் வலி. வலது தோள்பட்டை, கழுத்தில் மிகுந்த வலியால், கழுத்தை நேராக வைக்க இயலாத நிலை. விரல் களில் இழுப்பு மற்றும் அசைக்க முடியாத நிலை. முகம் மற்றும் கைகள் மரத்துப் போன நிலையில், சக்தியே இல்லாமல், வியர்க்கும் உள்ளங்கைகளுடன், வலியை சகிக்க முடியாமல் இருந்தாள். ஒரு விளையாட்டு வீராங்கனையான இந்த நோயாளி, உடற்பயிற்சி ஒட்டிய வாழ்க்கை முறையில், தினமும் காலையில் மணிக்கணக்காக, பசியுடன் விளையாட்டுப் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொள்வார். தன் தந்தையுடன் பல்வேறு உணவகங் களுக்குச் சென்று, விதவிதமான ஐஸ்க்ரீம்கள், குளிர்பானங்கள், காரசாரமான உணவுகள் என சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவருடைய உணவுப் பழக்கங்களும், நீண்ட நேர உடற்பயிற்சியும், உடலில் வாயுவின் சீற்றத்தை ஏற்படுத்தி, இந்த கொடிய வாத நோயைத் தோற்றுவித்தது.



சஞ்சீவனியில் ஆயுர்வேத முறைப்படி, முதல் 5 நாட்களுக்கு, பல்வேறு உபாதைகளுக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன. பின், வைத்தியசாலையில் அனுமதித்து, 'ஸ்னேஹ பானம்' எனும், வரையறுக்கப்பட்ட அளவில், நெய் மருந்துகளை அருந்தும் சிகிச்சை முறை துவக்கப்பட்டது. ஐந்து நாட்கள், 'எனிமா' சிகிச்சை செய்யப்பட்டது. 'வஸ்தி' எனும் எனிமா சிகிச்சைக்குப் பின், வெகு விரைவில் வலிகள் குறைய ஆரம்பித்தன. பின், வாதத்தைக் குறைக்கும் மருந்துகள் கொடுத்து, அவள் வலிகள் வெகுவாகக் குறைந்தன. மொத்தம் 20 நாட்கள், சிகிச்சை பெற்ற அவர், உணவுக் கட்டுப்பாட்டுடன், தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டார். ஒரு ஆண்டுக்கு பின், படிப்பை மீண்டும் தொடர்ந்தார். ஒரு விளையாட்டு வீராங்கனையான இந்த நோயாளி, தினமும் காலையில் மணிக்கணக்காக, பசியுடன் விளையாட்டுப் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொள்வார். தன் தந்தையுடன் பல்வேறு உணவகங்களுக்குச் சென்று, விதவிதமான ஐஸ்க்ரீம்கள், குளிர்பானங்கள், காரசாரமான உணவுகள் என சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவருடைய உணவுப் பழக்கங்களும், நீண்ட நேர உடற்பயிற்சியும், உடலில் வாயுவின் சீற்றத்தை ஏற்படுத்தி, கொடிய வாத நோயைத் தோற்றுவித்தது.



- டாக்டர் பி.எல்.டி.கிரிஜா,

சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்.

sanjeevanifoundation@gmail.com



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us