தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வாயு கோளாறால் மூட்டு வலியா

வாயு கோளாறால் மூட்டு வலியா

வாயு கோளாறால் மூட்டு வலியா


PUBLISHED ON : செப் 09, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2018


Follow on Google
அ நிறம் | அளவு

எனக்கு 52 வயதாகிறது. ஆறு மாதங்களாக தோள்பட்டை வலி. மருத்துவரிடம் ஆலோசனை செய்ததில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் தோள் மூட்டின் சுற்றுப்பட்டை தசையில் கால்சியம் தேங்கி நிற்பதாக தெரியவந்தது. இதற்கு சிகிச்சை உண்டா?

கால்சியம் தேங்கி நின்றால் தோள்மூட்டின் நீர் சுரப்பியல் உள் வீக்கமும் புண்ணும் ஏற்படும். இவ்வாறு உள்ளவர்களுக்கு மூட்டு நுண் துளை சிகிச்சையில் தேங்கி இருக்கும் கால்சியத்தை அகற்றினால் முழுமையாக வலி நீங்கும். மீண்டும் வலி வரும் வாய்ப்பு இல்லை. சிகிச்சையும் எளிதாகும். ஒரே வாரத்தில் குணமடைய முடியும்.

எனக்கு 48 வயது. ஏழு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இன்சுலின் எடுத்து கொண்டும் சர்க்கரை நோயின் கட்டுப்பாடு சுமாராகத்தான் உள்ளது. ஆறு மாதங்களாக தோள்பட்டையிலும் வலி உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி வருமா?

இருபது சதவீதம் சர்க்கரை நோயாளிகள் தோள்பட்டை வலியால் அவதிப்படுகிறார்கள். அதற்கு காரணம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சுற்றுப்பட்டை தசையில் செல்லும் ரத்தப்போக்கு குறைவதாகும். உங்களுக்கான முதல் சிகிச்சை சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதாகும். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கு பின்னும் வலி தொடர்ச்சியாக இருப்பவர்களுக்கு மூட்டு நுண்துளை சிகிச்சையில் நவீன சிகிச்சை அளித்தால் தோள்மூட்டு வலி குணமாகும்.

32 வயதான நான் டேபிள் டென்னிஸ் பிரியர். நான்கு மாதங்களாக விளையாட முடிவதில்லை. காரணம் என் வலது மணிக்கட்டில் உள்ள வலி ஆகும். மணிக்கட்டு மூட்டில் உள்ள 'T.F.C.C.' என்னும் ஜவ்வு கிழிந்து உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு சிகிச்சை இல்லையா?

'T.F.C.C.' என்பது நம் மணிக்கட்டு மூட்டினில் செல்லும் விசைகளை சமப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 'T.F.C.C.' ல் கிழியல் ஏற்பட்டு இருந்தால் மூட்டின் உறையில் வீக்கம் ஏற்பட்டு வலி ஏற்படலாம். உங்களுக்கு 'T.F.C.C.'ல் உள்ள கிழியல் சீரமைக்கப்பட்ட வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளது மணிக்கட்டு மூட்டிற்கு என்றே ஒரு சிறப்பு மூட்டு நுண் துளை சிகிச்சை கருவி உள்ளது. அதைக்கொண்டு சிறு துவாரம் வழியாக சிகிச்சை அளிக்க முடியும்.

60 வயதான எனக்கு இரண்டு மாதங்களாக முழங்கால் மூட்டு வலி உள்ளது. நாட்டு வைத்தியரிடம் காண்பித்து வருகிறேன். வாயு கோளாறு என்று கூறி உள்ளார். ஆதலால் கிழங்கு, பருப்பு போன்ற உணவு வகைகளை தவிர்த்து வருகிறேன். வலியில் எந்தவித மாற்றமும் இல்லை. நான் என்ன செய்வது?

வாயு என்பது வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்னை ஆகும். பொதுவாக வாயு கோளாறினால் மூட்டு வலி வருவதற்கான வாய்ப்பு இல்லை. மூட்டினை ஆய்வு செய்து ரத்தப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுத்தால் பிரச்னை தெரிந்துவிடும். முதலில் எலும்பு மூட்டு மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறவும்.

- டாக்டர் கே.என்.சுப்பிரமணியன்

எலும்பு சிறப்பு நிபுணர்

மதுரை, 93442 46436


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us