தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நார்ச்சத்து காய்கறிகள் புற்றுநோயை தடுக்கும்

நார்ச்சத்து காய்கறிகள் புற்றுநோயை தடுக்கும்

நார்ச்சத்து காய்கறிகள் புற்றுநோயை தடுக்கும்


PUBLISHED ON : செப் 09, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புற்றுநோய் வராமல் தடுக்க என்னவித உணவுகள் எடுக்கலாம்?

நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள், கொழுப்பில்லாத பொருட்களை சாப்பிடுவதின் மூலம் புற்றுநோயை தவிர்க்கலாம். தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்பது ஆங்கில பழமொழி.

இரண்டு முழங்கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டு பொருத்துவதால் புற்றுநோய் வருமா?

தற்போது செயற்கை மூட்டு செய்வதற்கு டைட்டானியம் என்ற உலோகம் உபயோகப்படுத்தப் படுகிறது. எவ்வளவு ஆண்டுகள் இருந்தாலும் அதனால் எந்த பாதிப்போ, புற்றுநோயோ வராது.

மாதவிடாய் காலத்தில் மார்பகத்தில் அதிக வலி ஏற்படுவதற்கு மேமோகிராம் செய்யலாமா?

நாற்பது வயதிற்கு உட்பட்டவர்கள் மேமோகிராம் செய்து கொள்வது நல்லதல்ல. ஏனெனில் அதன் மூலம் கதிர்வீச்சு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே அதற்கு பதிலாக நீங்கள் மார்பக அல்ட்ரா சோனோகிராம் செய்து சிகிச்சை எடுக்கலாம்.

மர அறுவை மில்லில் அரவை துாள்களை சுவாசிப்பதால் பாதிப்பு ஏற்படுமா?

மரத்துாள்களின் நடுவில் வேலை செய்யும் போது அது நுரையீரல்களுக்குள் சென்று நுரையீரல் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. ஆகவே நீங்கள் மர அறுவை மில்லில் வேலை செய்யும் போது துணியாலான முகத்திரையை அணிந்துகொள்வது நல்லது.

விவசாயியான நான் கொளுத்தும் வெயிலில் வேலை செய்வதால் தோல் சார்ந்த புற்றுநோய் வருமா?

மேலை நாட்டவர்களுக்கு சிவப்பு தோலில் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் அவர்கள் வெயிலில் அதிக நேரம் இருந்தால் தோல் புற்றுநோய் வரும். ஆனால், நமது நாட்டவர்களுக்கு கருப்பு தோல் காரணமாக புற்றுநோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. அதனால் எவ்வளவு நேரம் வெயிலில் இருந்தாலும், தோல் புற்றுநோய் வராது.



-டாக்டர். மோகன்பிரசாத்

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்

மதுரை. 98430 50822


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us