தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: கீரை சாப்பிட்டால், 'இன்சுலின்' சுரக்கும்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: கீரை சாப்பிட்டால், 'இன்சுலின்' சுரக்கும்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: கீரை சாப்பிட்டால், 'இன்சுலின்' சுரக்கும்!


PUBLISHED ON : ஜூலை 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்சுலின் செடிகளின் இலைகள், 30 - 60 நாட்களுக்குள், 'டைப்1, 2' என்ற இரு வகையான நீரிழிவு நோயையும், இயற்கையான வழியில் கட்டுப்படுத்தக் கூடியவை.

இந்திய ராணுவத்தில் பணி செய்து, ஓய்வு பெற்றவன் நான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிற்கு சென்றிருந்தேன்.

ஓய்விற்கு பின், அங்குள்ள மக்கள், விவசாய பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதை பார்த்த போது, இதுபோல நாமும் ஏதாவது செய்யலாமே என்று தோன்றியது. புதுமையாக, உபயோகமாக நேரத்தை செலவிட வேண்டும்; ஏதாவது ஒரு வகையில், அது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என, தீர்மானித்தேன்.

நாடு திரும்பியதும், இயற்கை விஞ்ஞானி, மறைந்த நம்மாழ்வாரின் புத்தகங்களை படித்தேன்; இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் வந்தது.

கேரளாவில் உள்ள பாலக்காட்டில், நல்லம்பள்ளியிலிருந்து, 200 இன்சுலின் கீரை செடிகளை வாங்கி வந்தேன்.

வேலுார் மாவட்டம் ஆரணியில், நான்கு ஏக்கர் நிலத்தை, குத்தகைக்கு எடுத்து பயிர் செய்தேன்; தற்போது ஆறு ஏக்கரில், 75 ஆயிரம் இன்சுலின் கீரைச் செடிகள் உள்ளன. மிகவும் குளிர்ச்சியான பருவ நிலையில் தான் இது வளரும் என்பதால், பசுமைக் குடில் அமைத்து உள்ளேன்.

இலையை நன்கு கழுவி, காலையில் இரண்டு இலை, மாலையில் இரண்டு இலை என, தினமும் சாப்பிட வேண்டும். வெற்றிலை போல மென்று சாப்பிடலாம் அல்லது 150 மி.லி., நீரில் இலையை கிள்ளிப் போட்டு, ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த சாறை குடிக்கலாம். பச்சடி, சாம்பார் என, எதில் வேண்டுமானாலும் போட்டு சாப்பிடலாம்.

இதுபோல, தொடர்ந்து, 30 நாட்கள் சாப்பிட்டால், நீரிழிவிற்கான மாத்திரை தேவை இருக்காது. இன்சுலின் ஊசி போடுபவர்கள், 45 நாட்கள் சாப்பிட வேண்டும். நீரிழிவு கட்டுக்குள் வந்து விட்டது என்பதை, பரிசோதனை மூலம் உறுதி செய்த பின், ஒரு நாளைக்கு, ஒரு வேளை சாப்பிட்டால் போதும்.

தொடர்ந்து இந்த கீரையை சாப்பிடுவதால், எந்த பக்க விளைவும் இல்லை; நீரிழிவு தொடர்பாக எந்த மருந்து, மாத்திரையும் எடுக்க தேவையிருக்காது. உணவுப் பாதுகாப்பு உட்பட, அனைத்து தேவையான பாதுகாப்பு சான்றிதழ்களும் உள்ளன. அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறேன்.

பி.எஸ்.வெங்கட், ராணுவ அலுவலர் (ஓய்வு), ஆரணி.

www.insulinkeerai.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us