தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: என் தாத்தாவுக்கு ஏன் இல்லை!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: என் தாத்தாவுக்கு ஏன் இல்லை!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: என் தாத்தாவுக்கு ஏன் இல்லை!


PUBLISHED ON : ஜூலை 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியா உட்பட ஆசிய நாடுகளில், மரபணுக்களிலேயே வயிற்றில், 'வெயிட்' போடக் கூடிய தன்மை அதிகம் என்று ஆராய்ச்சிகள் உள்ளன. உடல் முழுவதும், 'வெயிட்' போடுபவர்களை விடவும், வயிற்றில் மட்டும் எடை போடுபவர்களுக்கே, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் அதிகம் வருகின்றன.

'தொப்பை போடும் அபாயகரமான மரபணுக்கள் நமக்கு இருந்தது என்றால், என் தாத்தாவிற்கு, தாத்தாவின் தாத்தாவிற்கு அப்படி இல்லை. இன்றும், 80 வயதிற்கு மேல் உள்ளவர்களை பார்த்தால், வயிற்றில் சதையே இல்லாமல் இருக்கின்றனரே' என்று கேட்டால், அவர்களின் உணவும், உடல் உழைப்பும் வேறு. மிகக் குறைந்த அளவு, இயற்கை தானியங்களை சாப்பிட்டு, அதிகம் உழைத்தனர்; எவ்வளவு துாரம் ஆனாலும், நடந்தே போவர்; வீட்டில் எல்லா வேலைகளையும் அவர்களே செய்தனர்; விசேஷ நாட்களில் மட்டுமே அரிசி சாதம் சாப்பிட்டனர்.

தற்போது, தானியங்களை பாலிஷ் செய்து, நார்ச்சத்து முழுவதையும் நீக்கி, வெறும் மாவுச் சத்து உள்ளவற்றை மட்டுமே சாப்பிடுகிறோம். எல்லா உணவிலும் சர்க்கரை உள்ளது.

உடல் உழைப்பு போதுமான அளவு இல்லை. சர்க்கரை எல்லாம் கொழுப்பாக மாறி, மரபியல் காரணங்களால், இந்தியர்களுக்கு இடுப்பு மற்றும் வயிற்றை சுற்றி சேமிக்கப்படுகிறது.

டாக்டர் ஜெகதீஷ் சந்திர போஸ்

key2obesity@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us