தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/கபசுரக் குடிநீர் மட்டுமே போதாது!

கபசுரக் குடிநீர் மட்டுமே போதாது!

கபசுரக் குடிநீர் மட்டுமே போதாது!


PUBLISHED ON : ஏப் 29, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த ஆண்டு துவங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல், இந்த ஆண்டும் தொடர்கிறது. சென்ற ஆண்டு வைரஸ் தொற்றால் ஏற்பட்ட அறிகுறிகளுடன், பித்த சுர அறிகுறிகளும் சேர்த்து, இன்றைய வைரஸ் பரவுகிறது.

பித்த சுர அறிகுறிகள்

கடுமையான காய்ச்சல், நெஞ்செரிச்சல், தலை சுற்றல், அசதி, சோர்வு, வியர்த்து தலை கனப்பது, தொண்டை புண், நாக்கு உலர்வது, வாய் கசப்பு, சிறுநீர், மலம் மஞ்சள் நிறமாவது, பசி அதிகரித்து, காய்ச்சல் விட்டு விட்டு அடிப்பது, இவற்றோடு சளி, இருமல் சேர்ந்து வரலாம்.

இதற்கு கபசுரக் குடிநீருடன், பித்த சுரக் குடிநீரும் குடித்தால் தான் முழு பலன் கிடைக்கும். 'சித்த வைத்தியத் திரட்டு' என்னும் நுாலில், வாதக் காய்ச்சல், பித்தக் காய்ச்சல், கபக் காய்ச்சல் என, மூன்றாகக் காய்ச்சலைப் பிரித்து, அவற்றின் அறிகுறிகள், தீர்வுகள் கூறப்பட்டு உள்ளன.

பித்த சுரக் குடிநீர் தயாரிப்பு முறை:

விலாமிச்சம் வேர், சிறுகாஞ்சொறி வேர், வில்வ வேர், பாதிரி வேர், அதிமதுரம், கோஷ்டம், நன்னாரி, நிலாவாரை, சீரகம், தனியா, தும்பை வேர், பேரீச்சம் காளிணி, யானைத் திப்பிலி, நெல்லி வற்றல், சுக்கு தலா, 10 கிராம் எடுத்து, ஒரு நாள் வெயிலில் உலர்த்தி, சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக பொடித்து, கலந்து கொள்ளவும்.

தினம் காலையில், 100 கிராம் மேற்படி பொடியை எடுத்து, 2 லிட்டர் தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊற வைத்து, மிதமான தீயில் காய்ச்சி, 100 மில்லி குறைந்ததும் வடிகட்டி, ஆறிய பின் தேன் கலந்து பருகவும். மாலையில், கப சுரக் குடிநீர் குடிக்கலாம். இரண்டையும் தினமும் பருகினால், இரண்டாவது அலை கொரோனா வைரஸ் நிச்சயம் பாதிக்காது; பக்க விளைவுகள் இதில் இல்லை.

மூலிகைமணி டாக்டர் க.வேங்கடேசன்,

சென்னை.

73388 23784


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us