தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கீழாநெல்லி ஒரு கில்லி!

கீழாநெல்லி ஒரு கில்லி!

கீழாநெல்லி ஒரு கில்லி!


PUBLISHED ON : மார் 22, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீரை வகைகள் என்றாலே, இதில் மருத்துவ குணம் கட்டாயம் இருப்பதாக அறியலாம். அத்தகைய மருத்துவ குணம் கொண்ட ஒரு கீரை கீழாநெல்லி. கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ஒரு குறுஞ்செடி, இரு சீராய் அமைந்த சிறு இலைகளை உடையது. இலைக் கொத்தின் அடிப்புறத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும். மேற்புறத்தில் மேல் நோக்கிய காய்களை உடைய மேலாநெல்லியும் உண்டு. கீழ் நோக்கிய காய்கள் கொண்டதா என்பதை உறுதிபடுத்திய பின்னரே, இதனை பயன்படுத்த வேண்டும்.

இக்கீரை இந்திய மருத்துவத்தில் அரிய மூலிகையாகக் கருதப்படுகிறது. செடி முழுவதுமுள்ள தண்டு, வேர், மற்றும் இலைகள் உள்ளிட்ட அனைத்து பாகங்களும் பயன்தரக் கூடியவையாக உள்ளது. இக்கீரையில் புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு உள்ளிட்ட நான்கு சுவைகளும் உண்டு.

மருத்துவ பயன்கள்: மஞ்சள் காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும் வீக்கம், கட்டி, உள்ளிட்டவைகளை கரைத்து நரம்பு சதையை சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயல்படுகிறது. தீராத தலைவலி, கல்லீரல் பழுது, ரத்த சோகை இவைகளுக்கு அரிய மருந்தாக உள்ளது.

கீழாநெல்லி செடியோடு, 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை அனைத்தையும் சிறிதளவு சேர்த்து, அத்துடன் ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்த அரைத்த கலவையை ஏதேனும் ஒரு பானகத்தோடு கலந்து, காலை மாலை அருந்தினால் காமாலை நோய் நிச்சயம் குணமாகும். கீழாநெல்லி இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவி குளித்து வர சொறி சிரங்கு, நமச்சல் தீரும்.

கீழாநெல்லிசாறு, உந்தாமணிச் சாறு, குப்பைமேனி சாறு சமனாக கலந்து நல்லெண்ணெயில் எரித்து முகர்ந்து வர பீனிசம், தீராத தலைவலி, நீர் வடிதல் ஆகியவை காணாமல் போகும். இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது.

இதன் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே நீங்கும். ரத்த சோகையால் உடல் வெளுத்துக் காணப்படுபவர் மற்றும் மேகநோயால் அவதிப்படுபவர் இதனை நன்றாக அரைத்து தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கீழா நெல்லியுடன் சமமான அளவு கரிசிலாகண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிட்டு வர கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, ரத்தமின்மை தீரும்.

கண் பார்வை மங்குதல், மாலைக் கண் போன்ற கோளாறுகளுக்கு, கீழாநெல்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையை சம அளவு நன்றாக அரைத்து காலை, மாலை புளித்த மோரில் கலந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகினால் கண்பார்வை கூர்மை பெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us