தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சமையலறை சுத்தத்தில்...!

சமையலறை சுத்தத்தில்...!

சமையலறை சுத்தத்தில்...!


PUBLISHED ON : ஏப் 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தை காப்பதில், முக்கியத்துவம் வாய்ந்தது சமையலறை. இங்கு பராமரிக்கப்படும் சுத்தம், ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். சமையலில் இருக்கும் அக்கறை, சமையலின் போது பயன்படுத்தப்படும், சிறிய துண்டுகளில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

சமையலறை டவல்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க தவறினால், பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். இருப்பினும், எப்படியெல்லாம் சமையலறை டவல்களை சுத்தமாக பராமரிப்பது என்பது பலருக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது.

சமையலறை டவலை சுத்தப்படுத்துவதற்கு, நல்ல தரமான சலவை தூளை உபயோகிக்க வேண்டும் என்பதை, நினைவில் கொள்ள வேண்டும்.

டவலை துவைத்த பின், நன்கு உலர வைக்க வேண்டும். அப்படியே நீரோடு விட்டு விடக் கூடாது. தவறினால், கிருமிகள் மீண்டும் அவற்றில் பெருகி விட வாய்ப்புள்ளது. பொதுவாக, வெண்ணிற காட்டன் டவல்களை உபயோகிப்பது நல்லது.

சிலர், அவை விரைவில் அழுக்காகி விடும் என நினைப்பர். மேலும் அதில் உள்ள கறை, தெளிவாக தெரியும். உண்மையில், வெண்மையை எளிதில் வெளுத்து பளீச்சென்று ஆக்கி விடலாம்.

சமயலறையில் பயன்படுத்தும் துண்டை, சுடு தண்ணீரால் சுத்தம் செய்வது என்பது, கட்டாயமான ஒன்று. பின், ரசாயனம் கலக்காத வாசனை திரவியத்தை உபயோகிக்கலாம். இதிலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்கி நல்ல மனத்தை கொடுக்க வல்லது. வினிகர் அல்லது பேக்கிங் சோடா போன்றவற்றை இதற்கு மாற்றாக உபயோகிக்கலாம்.

சமயலறையில் பயன்படுத்தும் துண்டை துவைப்பதற்கு துணி மென்மையாக்கிகளை உபயோகிக்கக் கூடாது, இதை நீங்கள் எப்படி சோதித்து இருந்தாலும், இதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us