தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தினம் ஒரு தக்காளி

தினம் ஒரு தக்காளி

தினம் ஒரு தக்காளி


PUBLISHED ON : ஏப் 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தக்காளி, சமையலுக்கும், ரசம் வைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பது பலரது கருத்தாக இருக்கிறது. ஆனால், தக்காளியை பச்சையாக, சுத்தம் செய்து சாப்பிடும் போது, ஏராளமான சத்துகள் கிடைக்கின்றன. இப்படி சாப்பிடும் போது, உடலுக்கு பலம் கிடைக்கிறது.

உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு, இது ஒரு சிறந்த டானிக் ஆக அமைகிறது. இதில், வைட்டமின் 'ஏ' சுமார், 91 மில்லி கிராம் அளவு உள்ளது. வைட்டமின் 'பி1', 'பி2', 17 மில்லி கிராமும், வைட்டமின் 'சி', 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் உள்ளன. தவிர, உடலில் ரத்த உற்பத்திக்கு பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், சீரான ரத்த ஓட்டத்துக்கும் பயன்படுகிறது.

தோல் நோய்கள் வராது: தக்காளியை, எவ்வகையில் உட்கொண்டாலும், அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும். காலையிலும், மாலையிலும் 'சூப்' செய்து சாப்பிட்டு வந்தால், தோல் நோய்கள் வராது; தோலை பளபளப்பாக வைத்திருக்கும். தக்காளியில், சுத்தமான நீரும், வைட்டமின் 'எச்' சக்தியும் அதிகமாக உள்ளது.

ஒவ்வொரு நாளும், காலை, மாலை என, தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக கிடைக்கும். தினமும், 250 கிராம் வரை, தக்காளியை ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் வெப்பத்தின் அளவு அதிகரித்தால் ஒரு தக்காளியை சாறாகப் பிழிந்து அதனுடன் எலுமிச்சை பழ சாறையும், இனிப்பையும் கலந்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

அழகிய தோற்றம்: உடல் பருமனால் அவதிப்படுவோர், இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் இளைத்து அழகிய தோற்றம் கிடைக்கும். காரணம், தக்காளியில் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கிறது. உடல் பலவீனமாக உள்ளவர்கள் தினசரி தக்காளி ரசம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

செரிமான குறைபாடு, நெஞ்செரிச்சல், இரப்பை கோளாறு, கல்லீரல் பாதிப்பு, ஆண்மைக் குறைவு போன்ற பிரச்னைகளுக்கு தக்காளியை தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. தோல் நோய்கள், நீரிழிவு, மலச்சிக்கல், ரத்தசோகை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

இருதயத்துக்கு நல்லது: தக்காளியில் அதிக அளவு வைட்டமின் 'சி' உள்ளதால், தொடர்ந்து சாப்பிடுவது, இருதயத்துக்கு நல்லது. அத்துடன், உடம்பில் அதிக அளவு கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. தக்காளி விதைகளை ஒட்டி இருக்கும் ஜெலட்டினிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட 'ப்ரூட்ப்ளோ' என்ற பொருள், ரத்தம் கட்டியாவதைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படுவ தை தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கருவளையம் உள்ளவர்கள், தக்காளி, வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து, கருவளையத்தின் மீது பூசி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து மூன்று வாரங்கள் இவ்வாறு செய்து வந்தால், கருவளையம் மறைந்து விடும். முகம் பொலிவிழந்து போனால், தக்காளி சாற்றில் சிறிது ரவையை கலந்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் ஊறவைத்து பின், முகத்தை கழுவினால் முகம் பிரகாசிக்கும்.

எலும்புருக்கிபோன்ற நோயைத் தடுக்கும் மருத்துவக் குணமும் தக்காளிக்கு உண்டு என்று கண்டறிப்பட்டுள் ளது. எனவே, தக்காளியை தினமும் உணவில் சேர்த்து கொள்வதோடு, பச்சையாக சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட உபாதைகள் இருந்தாலும் நீங்கி விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us