தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி,கொஞ்சம் கேளு!: மண் தேய்த்தால் கொழுப்பு குறையும்!

குண்டு மல்லி,கொஞ்சம் கேளு!: மண் தேய்த்தால் கொழுப்பு குறையும்!

குண்டு மல்லி,கொஞ்சம் கேளு!: மண் தேய்த்தால் கொழுப்பு குறையும்!


PUBLISHED ON : நவ 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கை முறை விவசாயம் செய்யும் நிலத்தில், களிமண்ணை எடுத்து, அதனுடன் சில மூலிகைகளைச் சேர்த்து, மண் சிகிச்சை செய்யப்படும். மண்ணில், நிறைய தாதுக்கள், குறிப்பாக, சல்பர் இருக்கிறது.

இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குளிரச் செய்யும் தன்மையும் மண்ணில் அதிகம். சமீப ஆண்டுகளில், உடல் பிரச்னைகளில் பெரிய சவாலாக இருப்பது உடல் பருமன். குழந்தைகளில் துவங்கி, எல்லா வயதினருக்கும், இந்தப் பிரச்னை உள்ளது.

மண் சிகிச்சையினால், எளிதாக இந்தப் பிரச்னை சரி செய்ய முடியும். மண்ணை உடல் முழுவதும் பூசுவதால், அதனுடைய குளிர் தன்மை, தோலின் வழியே உடலினுள் சென்று, ஜீரண சக்தியை சீராக்குகிறது.

இதனால், தேவையற்ற கொழுப்பு கரைந்து, கலோரி குறையும். உடல் முழுதும் பருமனைக் குறைக்க தேவையில்லை, கையைக் குறைக்க வேண்டும், தொடையில் சதை அதிகம் உள்ளது, இடுப்புப் பகுதி சதை போடுகிறது, என்று சொல்பவர்களுக்கு, அந்தப் பகுதியில் மட்டும், மண் சிகிச்சை செய்து, அளவைக் குறைத்து, உடலின் அமைப்பை சரி செய்ய முடியும்.

உடல் பருமனுக்கு, தைராய்டு பிரச்னை, கருப்பையில் நீர்க் கட்டி போன்றவையும் காரணங்கள். உடல் முழுவதும் மண்ணைப் புசி, சூரிய ஒளியில் குறிப்பிட்ட நேரம், நிற்பதால், 'செரடோனின் ஹார்மோன்' நன்கு சுரந்து, உடல் பருமனுக்கு காரணமான பிரச்னைகள் சரியாகும். எடையும் குறையும்.

டாக்டர் யோ.தீபா துணை பேராசிரியை,

அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லுாரி, அரும்பாக்கம்.

தொலைபேசி: 99405 82500

sakshaayaan@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us