தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மனசே, மனசே குழப்பம் என்ன?: மறைப்பதற்கு எதுவும் இல்லை!

மனசே, மனசே குழப்பம் என்ன?: மறைப்பதற்கு எதுவும் இல்லை!

மனசே, மனசே குழப்பம் என்ன?: மறைப்பதற்கு எதுவும் இல்லை!


PUBLISHED ON : நவ 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்கப் பாடகர், நிக் ஜோனசுடன், அடுத்த மாதம் நடக்கவுள்ள, என் திருமண ஏற்பாட்டில், பரபரப்பாக இருக்கிறேன். வாழ்க்கையின் அடுத்த பொறுப்பிற்கு போவது, பரவசம் கலந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தத் தருணததில் தான், நான் எதிர்கொண்ட சவாலான தருணங்களை பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது.

பிறந்ததில் இருந்தே எனக்கு, ஆஸ்துமா கோளாறு உள்ளது.

நினைவு தெரிந்த நாளிலிருந்து, ஆஸ்துமாவிற்கான, 'இன்ஹேலர்' பயன்படுத்துகிறேன். நான் சொல்ல விரும்புவது, எந்த உடல் கோளாறும், நம்முடைய கனவுகளையும், விருப்பங்களையும் முடக்கி போட முடியாது: பிரச்னையைப் பற்றிய பயம் தேவைஇல்லை.

ஆஸ்துமா பற்றி, நிறைய தவறான அபிப்பிராயங்கள், பயங்கள் நம்மிடம் உள்ளது. உதாரணமாக, தொடர்ந்து இன்ஹேலர் பயன்படுத்தினால், குழந்தையின் உயரம் பாதிக்கப்படும், என்பது அதில் ஒன்று. என் உயரம், 5 அடி, 7 அங்குலம். நான் குழந்தைப் பருவத்தில் இருந்து, தினமும் உபயோகிக்கிறேன். வளர்ச்சியில் எந்த பாதிப்பும் இல்லையே! என் அனுபவத்தில், இன்ஹேலர், எந்த பக்க விளைவும் ஏற்படுத்தாது. சிறிய அளவிலான மருந்து, நேரடியாக நம் நுரையீரலுக்கு செல்கிறது. இது ரொம்பவே பாதுகாப்பான முறை. சுவாசப் பிரச்னையை சீர் செய்ய, தினமும் இன்ஹேலர் பயன்படுத்தலாம்.

உடம்பில் நீர் சத்து குறையும் வரை காத்திருந்து, தண்ணீர் குடிப்பது எவ்வளவு தவறோ, அந்த அளவு தவறு, பாதிப்பு வந்தபின், இன்ஹேலர் பயன்படுத்துவது.

தினமும் உபயோகித்தால், ஆஸ்துமா தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.பிரச்னை வந்தால், அதன் முழு பரிமாணத்தையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஆஸ்துமா, நம்மை கட்டுப்படுத்வதை விடவும், அதை நாம் எப்படி கையாள்வது என்ற விழிப்புணர்வு அவசியம்.

என்னை சுற்றி உள்ள அனைவருக்கும், எனக்கு இந்தக் கோளாறு இருப்பது தெரியும். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.

மேடை நிகழ்ச்சிகளின் போது, அதிக மாசு நிறைந்த இடங்களில், பட பிடிப்பில்... இப்படி எல்லா நேரமும் இன்ஹேலர் உபயோகிப்பேன். அதனால், அனைவருக்கும் நான் ஆஸ்தமா கோளாறு உள்ளவள் என்பது தெரியும்.



பிரியங்கா சோப்ரா,

பாலிவுட் நடிகை, மும்பை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us