குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: கொழுப்பிற்கு பிடித்தது எது?
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: கொழுப்பிற்கு பிடித்தது எது?
PUBLISHED ON : ஜன 21, 2018

உடல் எடை குறைய, உடம்பில் உள்ள நச்சுத்தன்மை முழுவதும் வெளியேற்றுவது தான், முதல் படி. சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், சோப்பு, க்ரீம், பற்பசை மற்றும் அழகு சாதனப் பொருட்கள் என, அனைத்திலும் பெட்ரோலியப் பொருட்களும், உலோகங்களுமே கலந்து உள்ளன. நச்சு கலந்த உணவை சாப்பிட்டு, நச்சுக் காற்றை சுவாசிக்கிறோம். நச்சு, நம் உடம்பின் அமிலத் தன்மையை அதிகரிக்கக் கூடியது. மாசு கலந்த சுற்றுச்சூழல், கேன்சர் மற்றும் ஆட்டிசம் என, பிறவி உடல் கோளாறுகள், மரபியல் நோய்களை உண்டாக்கக் கூடியது.
நம் உடம்பில் உள்ள கொழுப்பிற்கு, நச்சுவையும், நச்சுவிற்கு, கொழுப்பையும் மிகவும் பிடிக்கும் என்பது தான், இதில் வியப்பான விஷயம்!
உடம்பில் உள்ள நச்சு முழுவதும் வெளியேறா விட்டால், கொழுப்பை விரட்டுவது கடினம். இதற்கு முதல் படி, காலையில் வெறும் வயிற்றில், வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது.
இது, கல்லீரலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்குவதோடு, வயிற்றின் இயக்கத்தையும் சீராக்கும். எலுமிச்சை கலந்த நீரை குடிக்கும் போது, முதல் சில நாட்கள், வாந்தி வரும் உணர்வு, லேசான மயக்கம், தலை சுற்றல் போன்றவை வரலாம். உடம்பில் தங்கிய நச்சு, சிறிது சிறிதாக வெளியேறினால், இது சரியாகி விடும்.
ஹேமா ரத்தினம்
ஹோலிஸ்டிக் நியூட்ரிஷனிஸ்ட்,
டோரான்டோ, கனடா.
info@melliyal.com

