PUBLISHED ON : ஜன 14, 2018

கஜினி படத்தை ஹிந்தியில் எடுத்த போது, அமீர் கானை நேரில் பார்த்தவுடன், 'பிட்னெஸ்' மேல் ஆர்வம் வந்து விட்டது, சூர்யாவிற்கு. தன் உடல் தேவைக்கேற்ப, 'டயட் சார்ட்' தயாரித்து, அதைப் பின்பற்றத் துவங்கினார்.
'என் கடின உழைப்பு, 70 கிலோவில் இருந்த உடல் எடையை, 11 கிலோ குறைக்க உதவியது. நானும், என் மனைவி ஜோவும், அடிக்கடி வெளியில் சென்று சாப்பிடுவோம்; 'பிட்னெஸ்'சிற்காக அந்த சந்தோஷத்தை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.
'வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை ரொட்டி, அரிசி, பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்த்து, வேக வைத்த சிக்கன், மீன், முட்டையின் வெள்ளைக் கரு என, பார்த்துப் பார்த்து சாப்பிட ஆரம்பித்தேன். தினமும் ஜிம்மில், அரை மணி நேரம் ஏரோபிக்ஸ்சுடன் சேர்த்து, இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன்.
'ஒர்க் - அவுட்' முடிந்தவுடன், புரோட்டீன் பவுடர் கலந்த பால் குடிப்பேன். நிறைய பழங்கள், வேக வைத்த காய்கறிகள் சாப்பிடுகிறேன். வாரத்தில் ஒருநாள், உப்பை முழுவதும் தவிர்த்து, வெறும் மிளகு துாவிய சிக்கன், மீன் சாப்பிடுவேன். காபி, டீ குடிக்கும் பழக்கமே கிடையாது' என்கிறார்.
- சூர்யா, நடிகர், கல்வி ஆர்வலர்.

