தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: வேலையா, தொப்பையா...!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: வேலையா, தொப்பையா...!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: வேலையா, தொப்பையா...!


PUBLISHED ON : செப் 23, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'உடல் பருமன், மரபியல் ரீதியாகவும் வரலாம்; உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான உணவுப் பழக்கத்தாலும் வரலாம். காரணம் எல்லாம் இனி சொல்லக் கூடாது; பானை போன்ற வயிறு வைத்திருப்பவர்கள், உடனடியாக குறைக்க வேண்டும் அல்லது கடுமையான நடவடிக்கை நிச்சயம்' என்று, கர்நாடக மாநில ரிசர்வ் போலீசாருக்கு, உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.

ரிசர்வ் போலீஸ் படையின், கூடுதல் டைரக்டர் ஜெனரல் பாஸ்கர் ராவ், அனைத்து படை பிரிவுகளிலும் உள்ளவர்களின் உடல் தகுதியை, குறிப்பாக, தொப்பை அளவை கணக்கிட உத்தரவிட்டு உள்ளார். பானை போன்ற வயிறு இருப்பவர்களுக்கு, 'டயட்' மற்றும் உடற்பயிற்சியை கட்டாயமாக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

வாழ்க்கை மாறுபாடுகளால் ஏற்படும் உடல் பிரச்னைகளால், ஆண்டுதோறும் 40 - 50 வயதிற்குட்பட்ட, 150 போலீசார் இறப்பதாக கூறும் அவர், முதல் கட்டமாக, வெள்ளை அரிசி சாதத்திற்கு பதில், சிறுதானிய உணவு, தினமும் செய்யும், 'பரேடு' நேரத்தை அதிகரிப்பது, ஏதாவது ஒரு விளையாட்டை கட்டாயமாக்குவது என்று, தங்களின் கீழ் உள்ளவர்களின் உடல், மன, ஆன்மீக நலத்தை கவனிக்க வேண்டியது, கமாண்டோக்களின் பொறுப்பு என்று கூறியுள்ளார்.

மூன்று மாதத்திற்குள், தொப்பை குறைப்பில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்று பார்த்து, முடிவு செய்யப் போவதாக கூறுகிறார்.

https://www.dnaindia.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us