தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: வரைபடத்தை பார்த்தால், தெரிந்து விடும்!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: வரைபடத்தை பார்த்தால், தெரிந்து விடும்!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: வரைபடத்தை பார்த்தால், தெரிந்து விடும்!


PUBLISHED ON : டிச 16, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 16, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தையின் உயரமும், எடையும் சரியான அளவில் உள்ளதா, என்பதைக் கணக்கிட, குழந்தைகள் நல மருத்துவரிடம், ஒரு வரைபடம் இருக்கும். 80 சதவீதத்திற்கு மேல் வரைபடம் காட்டினால், குழந்தை உடல் பருமனுடன் இருக்கிறது என்று பொருள்.

குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு பெரிய பிரச்னையாக இருந்தது. மதிய உணவுத் திட்டத்தில், ஊட்டச்சத்து மிக்க உணவைக் கொடுக்க துவங்கியவுடன், குழந்தைகளின் பல உடல் பிரச்னைகள் சரியாகி விட்டன. ஆனால், உடல் பருமன் அவ்வளவு எளிதில் சரி செய்யக் கூடிய பிரச்னை இல்லை.

குழந்தைப் பருவத்தில், அதிக உடல் எடையுடன் இருந்தால், ஒவ்வொரு பருவத்திலும், உடல் பருமன், அதனால் ஏற்படும் பிரச்னைகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதால், இருக்க வேண்டிய எடையை விட, 5 கிலோ அதிகரிக்கலாம்; உடல் உழைப்பு இல்லாதது, மரபணு காரணங்கள், மன அழுத்தம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடல் கோளாறுகளுக்கு நீண்ட நாட்கள் எடுக்கும் மருந்துகள், பிரதான காரணங்கள். இவற்றால் தான், உடல் பருமன் ஆகிறது.

டாக்டர் வி.பாஸ்கரன்

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மருத்துவர், சென்னை.

baskaran.vasudevan@gmail.com

தொலைபேசி: 95000 60130


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us