அறுவை சிகிச்சை இல்லாமல் 'இம்ப்ளான்ட்' பல் பொருத்தலாமா
அறுவை சிகிச்சை இல்லாமல் 'இம்ப்ளான்ட்' பல் பொருத்தலாமா
PUBLISHED ON : டிச 16, 2018
முழு உடல் பரிசோதனை போல முழு பல் பரிசோதனை, சிகிச்சை உள்ளதா ?
பல் பிரச்னை உள்ளவரின் பல், தாடை, தசை என பல் சார்ந்த பகுதிகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்க 'டாசன் டென்டிஸ்ட்ரி' என்ற நவீன சிகிச்சை முறை உள்ளது. இந்த சிகிச்சை செய்த பின் பல் குறைபாடு முழுமையாக நீங்கும், பல் சேதமடையாது, தசை வலியும் இருக்காது. இதை 'புல் மவுத் ரீஹேபிலேஷன்' சிகிச்சை என்று அழைக்கிறார்கள்.
ஈறு அறுவை சிகிச்சை செய்யாமல் 'இம்ப்ளான்ட் பல்' பொருத்தலாமா ?
நவீன சிகிச்சையில் பற்களை முழுமையாக சி.டி., ஸ்கேன் செய்து, போட்டோக்களாக மாற்றி 'சாப்ட்வேர்' மூலம் 'மெர்ஜ்' செய்யப்படும். பின், அதை 3டி பிரின்டாக மாற்றியவுடன் ஒரிஜினல் பல், தாடை அமைப்பு கிடைக்கும். அந்த அமைப்பில் 'இம்ப்ளான்ட்' செய்ய வேண்டிய இடத்தில் பல் பொருத்தி ஒத்திகை பார்க்கப்படும்.
இப்பணி முடிந்ததும் ஈறுகளை அறுக்காமல் 'கைடு' மூலம் நேரடியாக 'டிரிலிங்' செய்து இம்ப்ளான்ட் செய்யலாம். இதில், வலி இருக்காது, துல்லியமாக பல் பொருத்தலாம்.
இம்ப்ளான்ட் பல் பொருத்திய பின் அதை எப்படி பராமரிப்பது ?
வழக்கம் போல காலை, இரவு பல் துலக்க வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை பல் டாக்டரிடம் சென்று பராமரிக்க வேண்டும். 'வாட்டர் பிளாஷ்' என்ற கருவியை வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது பற்களை சுத்தம் செய்யலாம்.
சொத்தை பற்களை அகற்றாமல் சீரமைத்து, சிகிச்சை அளிக்க முடியுமா ?
சொத்தை பற்களை அகற்றாமல் அதை சீரமைப்பது தான் நல்லது. முதற்கட்டமாக 'பேர்டான்', 'ரூட் கிளீன்', 'ஸ்பில்ட்னிங் தெரபி' கொடுக்க வேண்டும். இதை எல்லாம் செய்தும் பல் சீரமைப்பதில் சிக்கல் இருந்தால் இரண்டாம் கட்டமாக பல்லை அகற்றி இம்ப்ளான்ட் பொருத்தலாம்.
இம்ப்ளான்ட் செய்யாமல் பல் பொருத்த வழி இருக்கிறதா ?
பல் வரிசையில் ஏதாவது ஒரு பல் விழுந்துவிட்டால் அந்த வெற்றிடத்திற்கு முன் மற்றும் பின் உள்ள பற்களை 'கிரவுன் பிரிட்ஜ்' கொண்டு இணைத்து வெற்றிடத்தை நிரப்பலாம். இப்படி செய்யும் போது பல் விழுந்த இடத்தில் பல் இருக்கும் ஆனால், அந்த பல்லுக்கு கீழேயுள்ள வெற்றிடத்தில் உணவு துகள்கள் சேர்ந்து தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.
மேல் வரிசை பற்களை அகற்றினால் மூளை பாதிக்குமா ?
இது தவறான எண்ணம் மேல் வரிசை பற்களை அகற்றினால் எந்த வகையிலும் மூளை பாதிக்காது. அதே போல் சர்க்கரை நோயாளிக்கு கூட பற்களை அகற்றுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் 'இம்ப்ளான்ட்' பொருத்தும் முன் ஒரு வாரம், பொருத்திய பின் முற்றிலுமாக புகை பிடிப்பதை நிறுத்தினால் இம்ப்ளான்ட் ஆயுள் நீடிக்கும்.
- டாக்டர்.செந்தில் மூர்த்தி முருகேசன்,
பல் மருத்துவ நிபுணர், மதுரை.
92453 08244
