குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: காலை எழுந்தவுடன் உணவு!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: காலை எழுந்தவுடன் உணவு!
PUBLISHED ON : ஏப் 22, 2018

'வுமன் அண்டு வெயிட் லாஸ்' என்ற புத்தகத்தில் இருந்து...
ஒரு நாளின் முதல் உணவு காபி, டீயாக இருக்கக் கூடாது. இவை இரண்டும் உணர்வுகளைத் துாண்டக் கூடியது. எனவே, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சுவாசம், இதயத்துடிப்பு இவற்றை அதிகரிக்கச் செய்யும். விளைவு, 'ஸ்ட்ரெஸ்!' கொழுப்பை கரைப்பதற்கும், இடையூறாக இருக்கும். காலையில் துாங்கி எழுந்ததில் இருந்து, அடுத்த, 10 -15 நிமிடத்திற்குள் சாப்பிட்டு விட வேண்டும். பழங்கள், இட்லி, தோசை என, வழக்கமான உணவாக இருப்பது அவசியம்.
துாங்கி எழுந்த, 15 நிமிடங்களுக்குள் சாப்பிடும் முதல் உணவு, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து, உடல் உள்செயல்பாடு சீராக இருக்க உதவும்; கொழுப்பைக் கரைக்கும்; நாள் முழுவதும் சக்தி தரும்; அதன்பின் சாப்பிடும் உணவின் அளவு அதிகரிக்காது; சில நிமிடங்களில், ரத்த சர்க்கரை அளவு சீராகி, கொழுப்பு சேருவதைத் தவிர்க்கும்; வயிற்றில் அமில சுரப்பு, உப்புசம் போன்ற தொந்தரவுகள் வராது. மன, உடல் உழைப்பிற்கு ஏற்பவே, உடலின் உள்செயல்பாடு இருக்கும். அதிக வேலை செய்யும் போது, அளவு கூடுதலாகவும், ரிலாக்சாக இருக்கும் நேரத்தில், குறைந்த அளவும் சாப்பிட பழக வேண்டும்.
இது, கொழுப்பை எரிக்கவும், சுறுசுறுப்பாக செயல்படவும் உதவும்.

