குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: போதும் என்ற மனம் வராது!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: போதும் என்ற மனம் வராது!
PUBLISHED ON : செப் 02, 2018

உடல் பருமன், 'டைப் - 2' நீரிழிவு மற்றும் இதய கோளாறுகள் போன்றவை வருவதற்கு, மிக முக்கிய காரணம், சர்க்கரை.
இதை சாப்பிடுவதால், அதிகப்படியான கலோரி, உடம்பில் சேருகிறது என்பது மட்டு மல்ல, இதில் உள்ள, 'பிரக்டோஸ்' என்ற வேதிப்பொருளை, ரத்தத்தில் இருந்து நீக்குவதற்கான ஹார்மோன், நம் உடம்பில் இல்லை. குறிப்பிட்ட அளவு உணவு சாப்பிட்ட உடன், போதும் என்ற உணர்வை தருவது, 'லெப்டின்' என்ற ஹார்மோன். இதன் சுரப்பை, சர்க்கரை கட்டுப்படுத்தி விடும் திறன் கொண்டது.
எனவே, சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் போது, அளவே இல்லாமல் சாப்பிடுவோம். பாட்டில்களில் அடைக்கப்பட்ட, 250 மி.லி., பழச்சாறில், ஒன்பது டீஸ்பூன் சர்க்கரை உள்ளது.
கோக், பெப்சி போன்ற கார்பனேட் பானங்களில் இருப்பதை விடவும், இது அதிகம். வெள்ளைச் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது, உடல் எடை குறையவும், அதிகரிக்காமல் இருக்கவும் உதவும்.
'தி கிஸ் ஆப் லைப்' புத்தகத்திலிருந்து...
