sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!


PUBLISHED ON : அக் 15, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரண்டு இட்லி... இரண்டு மாடிகள்!

தினமும் சாப்பிடும் உணவில், 25 சதவீதம், நார்ச்சத்து இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நம் உணவுப் பழக்கத்தில், நம் உணவிலிருந்து, வெறும், 10 சதவீத நார்ச்சத்து தான் கிடைக்கிறது. நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும் என, நமக்குத் தெரிந்தாலும், அப்படியே முழு பழமாகவோ, சமைத்த காய்கறிகளாகவோ சாப்பிடாமல், ஜூஸ், சூப் என, மாறிவிட்டோம். முழுதாக அப்படியே சாப்பிடும் போது தான், இவற்றில், இயற்கையாகவே இருக்கும் நார்ச்சத்து கிடைக்கும். சாப்பிடும் உணவில் உள்ள கலோரி, சக்தியாக மாறுவதற்கு, 'பி' விட்டமின்கள் அவசியம். ஜூஸ், சூப் என, வேறு வடிவத்திற்கு மாறும் போது, இவையும் சிதைந்து விடுகின்றன. நான்கு இட்லி சாப்பிடும் பழக்கம் இருந்தால், இரண்டு இட்லி, மீதி இரண்டு இட்லிக்கு பதில், காய்கறி அல்லது பழ சாலட் என, சாப்பிடலாம். பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிடும்போது, வயிறு நிறைந்த உணர்வு இல்லாமல், அதே சமயம், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கத் தேவையான, 'எனர்ஜி' கிடைக்கும். நான்காவது மாடியில் அலுவலகமா... இரண்டு மாடிகள் மட்டும் லிப்ட், மற்ற இரண்டு தளத்திற்கு படிகள் என, தினசரி பழக்கத்தில் சிறிது மாற்றம் செய்தால் போதும்; உடல் எடை தானாகக் குறையும்.

உத்ரா ஷ்ரவன், டயட்டீஷியன், சென்னைutharas.u@simshospitals.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us