sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

"ஆய்வுக்கூட முடிவுகளில் மாறுபாடு உள்ளதே!'

/

"ஆய்வுக்கூட முடிவுகளில் மாறுபாடு உள்ளதே!'

"ஆய்வுக்கூட முடிவுகளில் மாறுபாடு உள்ளதே!'

"ஆய்வுக்கூட முடிவுகளில் மாறுபாடு உள்ளதே!'


PUBLISHED ON : பிப் 17, 2013

Google News

PUBLISHED ON : பிப் 17, 2013


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தேவமணிராஜன், மதுரை: எனக்கு, 2009ல் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. தற்போது, நடக்கும் போது, மார்பில் லேசான இறுக்கம் ஏற்படுகிறது. சிறிது நேரம் நின்று சென்றால், சரியாகி விடுகிறது. நான் தற்போது எடுக்கும் மாத்திரையை தொடர்வதா, வேறு மாத்திரையை எடுக்கலாமா?

பைபாஸ் சர்ஜரி என்பது, இதய ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கை, கால்களில் இருந்தோ, ரத்த நாளத்தை எடுத்து, பொருத்தி சரி செய்யும், அறுவை சிகிச்சை. பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு, பழைய ரத்த நாளத்தில் அடைப்பு அதிகரிக்கவும், புதிய ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்படவும், வாய்ப்பு உள்ளது. மறுபடியும் உங்களுக்கு நெஞ்சில் இறுக்கம் ஏற்படுகிறது என்றால், அவசியம் டிரெட் மில், எக்கோ கார்டியோகிராம் பரிசோதனைகள் தேவைப்படும்.

அதன் முடிவுக்கு ஏற்ப, சி.டி., ஆஞ்சியோ அல்லது இன்வேசிவ் ஆஞ்சியோ பரிசோதனை தேவைப்படும். அதன் முடிவுக்கு ஏற்ப, சிகிச்சை முறை அமையும். தற்போது நடந்தால் இறுக்கம் ஏற்படுவதால், அவசியம் உங்கள் மாத்திரையை மாற்றியமைக்க வேண்டும். பலருக்கும், மாத்திரைகளை மாற்றி அமைத்தாலே, இந்த தொந்தரவு மறைந்து விடும். எனவே உங்கள் இதய நிபுணரை அணுகி, ஆலோசனை பெறுவது நல்லது.

* ரங்கநாதன், மானாமதுரை: எனக்கு, இரண்டு மாதங்களாக படபடப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக இதய டாக்டரை பார்த்தபோது, எக்கோ, இ.சி.ஜி., பரிசோதனைகளை எடுத்துப் பார்த்து, இதய கோளாறு இல்லை என்றார். ஆனாலும் படபடப்பு தொடர்கிறது. என்ன செய்வது?

இதய படபடப்புக்கு, பல காரணங்கள் உள்ளன. பதற்றம், தூக்கமின்மை, ரத்தசோகை, தைராய்டு கோளாறுகள் மற்றும் இதய கோளாறு முக்கியமானவை. மற்ற அனைத்து முடிவுகளும் நார்மலாக இருந்தால், இதயத்துக்கான, 'ஏOஃகூஉகீ கூஉகுகூ' செய்ய வேண்டி வரும். இதில் உங்கள் ஒவ்வொரு இதய துடிப்பும், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு, நாள் முழுக்க பதிவு செய்யப்படும். அதை இதய நோய் நிபுணர் தீவிரமாக ஆய்வு செய்து, அதன் முடிவுக்கு ஏற்ப சிகிச்சை அளிப்பார்.

* கோவிந்தராஜ், கோவில்பட்டி: எனக்கு, இரண்டு ஆண்டுகளாக, ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. ஒரு வார இடைவெளியில், இரண்டு ஆய்வுக் கூடங்களில் பரிசோதனை செய்தேன். ஒன்றில், எல்.டி.எல்., அளவு, 121 மி.கி., என்றும், மற்றொரு ஆய்வுக் கூடத்தில், 186 மி.கி., என்றும் முடிவு வந்துள்ளது. நான் என்ன செய்வது?

ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், வாழ்க்கை முறை மாற்றம், தினசரி நடைப்பயிற்சி, ஸ்டாட்டின் போன்ற மருந்துகள் தேவைப்படும். ரத்தத்தில், எல்.டி.எல்., என்ற கெட்ட கொழுப்பை பொறுத்தவரை, அவசியம், 100 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், ரத்தக்குழாய் நோய்களான, மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தவிர்க்க முடியும். ரத்தப் பரிசோதனையை பொறுத்தவரை, இரண்டு முடிவுகளில் ஒன்று, தவறானது தான். எனவே முதலில் எந்த ஆய்வுக் கூடம் தரமானது என கண்டறிந்து, அதே ஆய்வுக் கூடத்தில் தொடர்ந்து பரிசோதனை செய்வது நல்லது. ஏனெனில், உங்கள் டாக்டர், எல்.டி.எல்., அளவை பொறுத்து தான், மருந்து மாத்திரைகளை மாற்றி அமைப்பார்.

டாக்டர் சி.விவேக்போஸ்,

மதுரை, 0452 233 7344






      Dinamalar
      Follow us