sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

குளிர்பானங்களால் எலும்புகளுக்கு பாதிப்பா?

/

குளிர்பானங்களால் எலும்புகளுக்கு பாதிப்பா?

குளிர்பானங்களால் எலும்புகளுக்கு பாதிப்பா?

குளிர்பானங்களால் எலும்புகளுக்கு பாதிப்பா?


PUBLISHED ON : பிப் 17, 2013

Google News

PUBLISHED ON : பிப் 17, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிகரெட், மதுபானங்களில் உள்ள அமிலத்தன்மை கொண்ட மூலப்பொருட்கள், குளிர்பானங்களில் உள்ள, 'பாஸ்போரிக்' அமிலம், உடம்பிற்கு செல்லும்போது, அவை கால்சியம் சத்தை உறிஞ்சி, எலும்புகளை பலவீனமடைய செய்யும்

* பெரியவர்களை ஒப்பிடும்போது, எலும்பு முறிவுக்கு ஆளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க என்ன காரணம்?

வீட்டு வராண்டா, மொட்டை மாடி, தெருவில், ஓடி, ஆடி, விளையாடும்போது, கீழே விழுந்து எழும், தங்கள் பிள்ளைகளை பார்க்கும்பொழுது, அவர்களுக்கு கை, கால் எலும்பு முறிந்து விடுமோ என்ற பயம் பெற்றோருக்கு ஏற்படுவது இயல்பு.

ஆனால், பெரியவர்களை ஒப்பிடும்போது, சிறுவர்களின் உடல் எலும்புகள், வளையும் தன்மைக் கொண்டவையாக உள்ளதால், அவர்களுக்கு எளிதில் எலும்பு முறிவு ஏற்படுவதில்லை. எலும்பு முறிவுக்கு ஆளாவோரில், 12 வயதிற்குஉட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை, 10 சதவீதத்திற்கும் குறைவாக தான் உள்ளது.

* குதிகால் வலி வருவதற்கு என்ன காரணம்?

இறுக்கமான மற்றும் கடினமான காலணிகளை அணிவது, மற்றவர்கள் மத்தியில், தங்களை உயரமாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பெண்கள் அணியும், 'ஹை ஹீல்ஸ்' போன்றவை, குதிகால் வலிக்கு முக்கிய காரணம். மேலும், நிற்கும்போது, முதுகெலும்பை நேரான நிலையில் வைத்து நிற்காததும், இப்பிரச்னைக்கு காரணம் என, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

* சாலை விபத்துகளில் சிக்குவோரில் பலருக்கு, எலும்பு முறிவு ஏற்படுகிறது. இதை தவிர்க்க முடியாதா?

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு, 'ஹெல்மேட், சீட் பெல்ட்' ஆகியவை உள்ளன. இவற்றை போல, வாகன ஓட்டிகள் சாலை விபத்துகளில் சிக்க நேர்ந்தால், அவர்களின் எலும்புகள் முறியாமல் இருக்க, 'கிராஷ் ஜாக்கெட்' (Crash Jocket) எனும் பிரத்யேக உடை உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான இந்த உடையை, நம் நாட்டில் பிரபலப்படுத்த வேண்டும். ஆனால், வாகனம் ஓட்டும்போது, உயிருக்கு பயப்படுவதைவிட, போக்குவரத்து போலீசார் விதிக்கும் அபராதத்திற்கு பயந்து தான், நம்மில் பலர், 'ஹெல்மேட்' அணிகின்றனர். இத்தகைய சூழலில், 'கிராஷ் ஜாக்கெட்' எல்லாம், நம் நாட்டில் தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்று தான் தோன்றுகிறது.

* எலும்பு மெலிதல் நோய் எதனால் வருகிறது?

உடல் எலும்புகளில் உள்ள கால்சியம் சத்து குறைவதால், எலும்பு மெலிதல் நோய் ஏற்படுகிறது. பெண்களுக்கு, மாதவிடாய் நிற்கும் நேரத்தில் உண்டாகும், 'ஈஸ்ட்ரோஜன்' ஹார்மோன் குறைபாடும் இந்நோய்க்கு காரணம். இதற்கு ஆளாவோரின் எலும்புகள் மெலிந்து, லேசாக வழுக்கி விழுந்தாலோ, அதிக எடையுள்ள பொருட்களை தூக்கினாலோ உடைந்துவிடும். குளிர்பானங்களில் உள்ள, 'பாஸ்போரிக்' அமிலம், சிகரெட், மதுபானங்களில் உள்ள அமிலத்தன்மை கொண்ட மூலப்பொருட்கள், தொடர்ந்து உடம்பிற்கு செல்லும்போது, அவை கால்சியம் சத்தை உறிஞ்சி, எலும்புகளை பலவீனமடைய செய்து விடும். பச்சை காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பால் போன்றவற்றை உட்கொண்டாலே போதும். எ<லும்பு மெலிதல் நோய் எட்டிப் பார்க்காது.

* எலும்பு புற்றுநோய் வர காரணம் என்ன?

இந்தியாவில், பல்வேறு புற்றுநோய்களுக்கு ஆளாவோரில், 2 சதவீதம் பேர் தான், எலும்பு புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். இதற்கு குறிப்பிட்ட காரணங்கள் கண்டறியப்படவில்லை. எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம், இந்நோயை குணப்படுத்தலாம். முதுகெலும்பில் இந்நோய் வந்தால், குணப்படுத்துவது சற்று கடினம்.

* மூட்டு வலியை தவிர்ப்பது எப்படி?

கை, கால் மூட்டுகளில் உள்ள, 'கார்ட்டிலேஜ்' சவ்வு தேய்வதால் தான், பெரும்பாலோருக்கு, மூட்டு வலி ஏற்படுகிறது. இந்த சவ்வு தேய்வதற்கு, உடல் பருமன் முக்கிய காரணம். 50 வயதை கடந்தவர்கள் அதிகளவு, மூட்டு வலி பிரச்னைக்கு ஆளாகின்றனர். மருத்துவரின் ஆலோசனைப்படி, முறையான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம், இவ்வலியை தவிர்க்கலாம்.

டாக்டர் ரவி சுப்ரமணியம்,

எலும்பியல் நிபுணர், மதுரை. 98400 75225






      Dinamalar
      Follow us