தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/'புளூ'வில் இருந்து ஐரோப்பா கற்ற பாடம்!

'புளூ'வில் இருந்து ஐரோப்பா கற்ற பாடம்!

'புளூ'வில் இருந்து ஐரோப்பா கற்ற பாடம்!


PUBLISHED ON : ஜூலை 14, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 14, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 100 ஆண்டுகளாக, பலவித வைரஸ் தொற்றுகளை எதிர் கொண்டு சமாளித்து வந்திருக்கிறோம். எந்த புளூவாக இருந்தாலும் தீவிர பாதிப்பு ஏற்படுத்துவது 1 சதவீதத்திற்கும் குறைவு. ஆனால், கொரோனா பாதிப்பு இதை விட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேருக்கு நேரடி மருத்துவ கண்காணிப்பு தேவை இருப்பதில்லை. 20 சதவீதம் பேருக்கு நேரடி கண்காணிப்பும், இவர்களில் 5 சதவீதத்தினருக்கு தீவிர சிகிச்சையும் தேவைப்படுகிறது.

நீல மண்டலம்

ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா, இத்தாலியின் சர்டினியா, கிரீஸ் நாட்டில் உள்ள எல்-கரியா, கலிபோர்னியாவில் உள்ள லோமாலின்டா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள், பிரத்யேக முயற்சி எதுவும் இல்லாமலே, 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கின்றனர்.

வெறுமனே நீண்ட ஆயுள் என்று சொல்வதை விட, ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் இருக்கின்றனர். எப்படி இது சாத்தியம் என்று ஆராய்ந்த போது, இரண்டு விஷயங்கள் தெரிந்தது. முதலில், உடற்பயிற்சி செய்ய இவர்கள் மறப்பதேயில்லை.

அந்தந்த பருவத்தில் பாதிக்கும் புளூ தொற்றுக்கு அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். கொரோனா வைரசால் ஏற்படும் ரத்த உறைவைப் போன்று, எல்லா வகை புளூ தொற்றும் ரத்த உறைவை ஏற்படுத்தும்.

தடுப்பூசி போடுவதால், புளூ பாதிப்பு, அதன் பக்க விளைவுகளான மாரடைப்பு, பக்கவாதம் எதுவும் இவர்களை பாதிப்பதில்லை. அவர்களின் வாழ்க்கை முறையும் கட்டுக்குள் உள்ளது. தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்கின்றனர்; மனதிற்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களுடன் அதிக நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுகின்றனர்.

வைரஸ் தொற்றுக்கு போடப்படும் தடுப்பூசி, ரத்த உறைவை ஏற்படுத்தும் என்ற அச்சம் உள்ளது. 10 லட்சம் பேரில் ஐந்து பேருக்கு மட்டுமே இப்பிரச்னை வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேரில், ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு ரத்த உறைவு ஏற்படுகிறது. அதிக பலன் எதில் கிடைக்கிறது என்பதே இப்போதைக்கு முக்கியம்.

டாக்டர் சாய் சதீஷ்,

இதய நோய் சிறப்பு மருத்துவர்,

அப்பல்லோ மருத்துவமனை, சென்னை


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us