தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வெயிலால் வெப்பம்குளிர்ச்சி காப்போம்

வெயிலால் வெப்பம்குளிர்ச்சி காப்போம்

வெயிலால் வெப்பம்குளிர்ச்சி காப்போம்


PUBLISHED ON : மே 17, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

வெயிலால் பாதிப்புகள் ஏற்படாமல் தப்ப, சில வழிமுறைகள்: வெயிலுக்கு உகந்தது கதர் ஆடை. உடலில் உண்டாகும் வியர்வையை உறிஞ்சுவதுடன், வியர்க்குரு வருவதையும் தடுக்கும். வெயில் காலங்களில் ஓட்டை விழுந்துள்ள ஓசோன் மண்டலத்தின் வழியாக, அதிகமான அல்ட்ரா வைலட் கதிர்கள் பாயும். இதனால் கண்கள் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க 'ஆட்டோ ரிப்ளக்ஷன் கிளாஸ்' அணிவது நல்லது.

உடல் சூட்டையும், தோல் நோயையும் தவிர்க்க இளநீர் அருந்துவதுடன், நுங்கு, வெள்ளரி, தர்ப்பூசணி அதிகம் சாப்பிட வேண்டும். வியர்வை நாற்றத்தைப் போக்க குளிக்கும்போது எலுமிச்சம் பழத்தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பு தடவி கழுத்து, அக்குள் உள்ளிட்ட பகுதிகளில் தேய்த்தால் வியர்வை நாற்றம் வராது.

கோடையில் வரும் அக்கி, அம்மை நோய்க்கு வெள்ளரியும், கிர்ணிப்பழமும் மகத்தானது. காஸ் நிரம்பியுள்ள குளிர்பானங்களை அருந்துவதைத் தவிர்த்து, இந்தச் சீசனில் கிடைக்கும் பழ வகைகளை அதிகம் சாப்பிடுவது அவசியம்.

ரோஜாப்பூ குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும். வட்டமாக அரிந்த வெள்ளரியை கண்கள் மீது வைத்துக் கொண்டு உறங்கினால், கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். மருதாணியையும், கரிசலாங்கண்ணி இலையையும் சேர்த்துக் காய்ச்சப்பட்ட தேங்காய் எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து படுத்து, மறுநாள் வில்வங்காய் கலந்த சிகைக்காய்ப் பொடி தேய்த்துக் குளிப்பது உகந்தது.

குளிக்கும்போது தேய்ப்பதற்கு என்று நாட்டு மருந்துக் கடைகளில் தனியாகப் பொடி விற்கப்படுகிறது. இதனை சோப்புக்குப் பதிலாக பயன்படுத்தினால் முகத்திலும், உடலிலும் எண்ணெய் வழியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us