sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மனசே மனசே... குழப்பம் என்ன!

/

மனசே மனசே... குழப்பம் என்ன!

மனசே மனசே... குழப்பம் என்ன!

மனசே மனசே... குழப்பம் என்ன!


PUBLISHED ON : அக் 08, 2017

Google News

PUBLISHED ON : அக் 08, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்க்கையின் மேல் எந்த நம்பிக்கையும், பிடிப்பும் இல்லாமல், பெற்றோர் அவர்களின், பிளஸ் 1 படிக்கும் மகளுடன், என்னிடம் வந்தனர். சில வாரங்களுக்கு முன் வரை, நாட்கள் எந்த பிரச்னையும் இல்லாமல், அமைதியாகவே போய் கொண்டிருந்தன.

ஒரே வீட்டில், ஒருவரோடு ஒருவர் அதிகம் பேசிக் கொள்ளாமல், தனித்தனித் தீவுகளாக வாழ்ந்தாலும், பிரச்னை ஒன்றும் ஏற்பட்டது இல்லை. எதிர்பாராமல், அவர்களின் மூத்த மகள் இறந்துவிட, நெருங்கிய உறவினர்கள் யாரும், மகளின் மறைவிற்கு வரவில்லை. குறிப்பாக, அமெரிக்காவில் இருக்கும் பெண்ணின் தாய் மாமா வரவில்லை. இது மிகுந்த அதிர்ச்சியை தர, மூன்று பேரும் அதீத மன உளைச்சலில், ஒருவரை ஒருவர் புகார் கூறி, தொடர்ந்து வாக்குவாதம். ஒரு கட்டத்தில், சாப்பிடுவது, துாங்குவது என, அன்றாட வேலைகளின் போது கூட, அவர்களால் இயல்பாக பேசிக் கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு மூவரும் பதற்றம், மனஅழுத்தத்தில் இருந்தனர். சேர்ந்தும், தனித்தனியாகவும் தொடர்ந்து பேசிப் பார்த்ததில், மகள் இறப்பதற்கு முதல் நாள் வரையிலும், அவர்களுக்கு மத்தியிலும் சரி, நெருங்கிய உறவுகளுடனும் சரி, தாங்கள் உண்டு, தங்கள் வேலை உண்டு என, விலகியே தான் இருந்திருக்கின்றனர். இதுவரை, அதற்கான தேவையும் வாய்க்கவில்லை. மகளின் இழப்பு தாங்க முடியாத மன உளைச்சலைத் தர, தங்களுக்கு ஆதரவாக யாருமே இல்லை என்ற எண்ணமும் சேர்ந்து, பிரச்னை பெரிதாகி விட்டது.

குறைந்தபட்சம், மனம் விட்டுப் பேசி, ஒருவரோடு ஒருவர் அன்பாக, ஆதரவாக இருந்திருந்தால், மகளின் தற்கொலையைக்கூட தவிர்த்திருக்க முடிந்திருக்கும் என்பதை, கவுன்சிலிங்கிற்கு பின் புரிந்து கொண்டனர். 'அக்கம்பக்கத்தில், உறவினர்களுடன் பேசினால், ஏதாவது வம்பு வரும். இது தேவையில்லாத டென்ஷன்; சரி உங்கள் குழந்தைகளோடு மனம் விட்டு பேசவதில் என்ன சிக்கல்?' எனக் கேட்டதற்கு, 'குழந்தைகளிடம் என்ன பேச... சாப்பாடு தர்றோம். தேவையானது எல்லாம் இருக்கு. இதற்கு மேல்ல அவர்களிடம் என்ன பேச...' என்றனர். 'விதவிதமாக சமைத்துக் கொடுத்து, தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுப்பது மட்டுமே போதாது. குழந்தைகள் வளரும் போது, அவர்கள் உடல் மட்டும் வளருவதில்லை; மனமும் கூடவே வளருகிறது. 'வளரும் பருவத்தில், எதைப்பற்றியும் ஒரு தெளிவான அபிப்ராயம் இல்லாமல், குழப்பமும், பயமும் இருப்பது இயல்பு. 'குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த நாள் முதல், பள்ளியில், வகுப்பறையில் என்ன நடந்தது என, அனைத்து விபரங்களையும் இயல்பாக கேட்க வேண்டும். 'எப்போதும் குழந்தைகளிடம், நண்பர்களை போல பழகினால், எல்லா விஷயத்தையும் வீட்டில் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும். 'குழந்தைகள் வளர வளர, அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகள், குழப்பங்களையும் பகிர்ந்து கொள்வர். தங்களின் அனுபவத்தின் மூலம் பொறுமையாக விளக்கினால், குழந்தைகளால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்' என, விளக்கினேன். அவர்களின் இளைய மகள் அடிக்கடி எனக்கு போன் செய்து, அவளின் தனிப்பட்ட விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறாள்.

எப்போதும் குழந்தைகளிடம், நண்பர்களை போல பழகினால், எல்லா விஷயத்தையும் வீட்டில் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை, அவர்களுக்கு ஏற்படும்

டாக்டர் அபிலாஷா, மனோதத்துவ நிபுணர், சென்னை.abilasha999@gmail.com






      Dinamalar
      Follow us