தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!:பருமன் குறைய முச்சுவை!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!:பருமன் குறைய முச்சுவை!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!:பருமன் குறைய முச்சுவை!


PUBLISHED ON : அக் 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்முடைய உணவு பழக்கம் தான், ஆரோக்கியத்தின் அடிப்படை. இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, காரம் என, அறுசுவை இருக்கிறது. இந்த எல்லா சுவைகளும், நம் உணவில் இருக்க வேண்டும் என்றாலும், துவர்ப்பு, கசப்பு, புளிப்பு இந்த மூன்றும் முக்கியமானவை. இவை, நாம் சாப்பிடும் உணவில் உள்ள கலோரியை எரிக்க உதவும்; மற்ற சுவைகள், உடல் எடையை அதிகரிக்கின்றன. தினமும் காலையில், முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால், உடல் எடை குறையும். இது, நான் அனுபவத்தில் தெரிந்து கொண்டது. வெந்தயத்தை, 24 மணி நேரம் நீரில் ஊற வைத்து, பின் சுத்தமாக கழுவி, நீரை வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் மூடி வைத்தால், 48 மணி நேரம் கழித்து, நன்றாக முளை விட்டிருக்கும். இதில், எள், ஆளி விதை சிறிது சேர்த்து சாப்பிட்டால், நல்ல பலன் உண்டு.

மல்லிகா பத்ரிநாத், ஹோம் சயின்ஸ், சென்னை.mallikabadrinathcook@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us