sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மனசே மனசே... குழப்பம் என்ன!

/

மனசே மனசே... குழப்பம் என்ன!

மனசே மனசே... குழப்பம் என்ன!

மனசே மனசே... குழப்பம் என்ன!


PUBLISHED ON : டிச 24, 2017

Google News

PUBLISHED ON : டிச 24, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணங்களுக்கு சக்தி இருக்கிறது என்பது, நம் எல்லாருக்கும் தெரியும். நமக்கு, ஒரு நாளைக்கு, 60 ஆயிரம் எண்ணங்கள் வந்து போகின்றன. அமெரிக்காவில் உள்ள, 'இன்ஸ்டிடியூட் ஆப் ஹாத் மேத் பவுண்டேஷன்' என்ற அமைப்பினர், ஒரு முக்கிய விஷயத்தை கண்டுபிடித்து உள்ளனர். அதாவது, 'மனிதர்களின் மூளையில் இருந்து வெளியாகக் கூடிய எண்ணங்களின் சக்தியான, 'எலக்ட்ரோ மேக்னடிக் வைப்ரேஷனை' விட, இதயத்தில் இருந்து உணர்வுகள் மூலம் வெளியாகக் கூடிய சக்தி, 5,000 மடங்கு, சக்தி வாய்ந்தது' என்கின்றனர்.

எதிர்மறையான எண்ணங்கள் வந்தாலும், நேர்மறையான உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் போது, எதிர்மறையான எண்ணங்களின் தாக்கம், பெரிய அளவில் இருக்காது. இரண்டு விதமான உணர்வுகளை நாம் வெளிப்படுத்துகிறோம். நம்பிக்கை, பொறுமை, கருணை, நன்றியுணர்வு போன்ற, அன்பு சார்ந்த உணர்வுகள்; சோகம், கோபம், பொறாமை, கர்வம் போன்ற பயம் சார்ந்த உணர்வுகள்... நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகள், பிரபஞ்ச சக்தியுடன் இணைந்து, நம் வாழ்க்கையை வடிவமைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஐசக் நியூட்டன், தன் ஆராய்ச்சியில், 'இந்த பிரபஞ்சம் முழுவதையும், ஒரு சக்தி, தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.

'அதற்கு உயர்ந்த ஞானம், அதாவது, 'ரியல் இன்டலிஜன்ஸ்' இருக்கிறது; அறிவியலால் அதைக் கட்டுப்படுத்த முடியாது' என்கிறார். கிரேக் பிராடன் என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர், பிரபஞ்ச சக்திக்கு மூன்று விதமான தன்மைகள் இருப்பதாக கூறுகிறார். 'முதலில், ஒரு, 'கன்டெய்னர்' போல, இந்த சக்தியானது, பிரபஞ்சத்தை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. இரண்டாவது, இறந்த, நிகழ், எதிர்காலத்தை இணைக்கக் கூடிய பாலமாக, அந்த சக்தி உள்ளது. மூன்றாவது, நம் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடியாக, அந்த சக்தி உள்ளது' என்கிறார்.அன்பு சார்ந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் போது, அது சார்ந்த நிகழ்வுகளை, பிரபஞ்ச சக்தி நம் வாழ்க்கையில் நடத்திக் காட்டுகிறது. பயம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தினால், அது சார்ந்த நிகழ்வுகள் நடக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில், ஓர் உதாரணத்தை காட்டுகிறார். ஒரு வயதான மூதாட்டிக்கு, குணப்படுத்த முடியாத, கடைசி நிலையில், சிறுநீரகப் பையில் கேன்சர்... அவரை சீனாவில், பீஜிங் நகருக்கு அழைத்துச் சென்று, 'ஜீனங் குகாங்' என்ற சீன முறைப்படி, சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு இருந்த குணமாக்கும் வல்லுனர்கள், அந்த மூதாட்டிக்கு, 'கேன்சர் சரியாகி விட்டது' என்ற நம்பிக்கையை கொடுத்தனர். 'உங்களுக்கு குணமாகி விட்டது' என்ற நேர்மறையான எண்ணத்தை, திரும்ப திரும்பச் சொல்லி, அவரை குணப்படுத்தினர்.அன்பு சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?நாம் நேசிக்கிற படிப்பை படிப்பது, விரும்பும் தொழிலை செய்வது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மற்றவர்களுக்கு உதவி செய்வது, அவரவர் நம்பும் விஷயத்தை, வாழ்க்கையில் கடைபிடிப்பது, தினசரி தியானம் செய்வது... இதையெல்லாம் செய்யும் போது, வாழ்க்கையில் நமக்கு என்னவெல்லாம் கிடைத்திருக்கிறதோ, அதில் நிறைவையும், முழுமையையும் நம்மால் பார்க்க முடியும். அதே போல, நேர்மறை எண்ணங்கள், உணர்வுகள் மூலம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டு, தேவையான விஷயங்களை உருவாக்கவும் முடியும். நாம் எப்போதும், நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு, பயம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்; போலியான கவசத்தைப் போட்டு, சுய அடையாளத்தை இழந்து விடுகிறோம். இதனால், என்ன தான் நாம் விரும்பிய பொருள் சார்ந்த விஷயங்கள் கிடைத்தாலும், நிறைவில்லாமல் வாழ்கிறோம். மாறாக, நேசிக்கும் விஷயங்களை செய்யும் போது, அன்பு சார்ந்த உணர்வுகள் மட்டுமே வெளிப்படுகின்றன; அப்போது, நம் வாழ்க்கை முழுமை அடைகிறது.

டாக்டர் ஜே.விக்னேஷ் சங்கர்,உளவியல் நிபுணர், மதுரை.unitedsoulfoundation@gmail.com






      Dinamalar
      Follow us