தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/காதல்கள் பல வரும்... கையில் கீறல்கள் பல விழும்!

காதல்கள் பல வரும்... கையில் கீறல்கள் பல விழும்!

காதல்கள் பல வரும்... கையில் கீறல்கள் பல விழும்!


PUBLISHED ON : மே 09, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அடி என்னடி பண்ணுனே... கையிலே இப்படி ரத்தம் கொட்டுது...' என, மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் தாய் சுமதி. ரத்தம் சொட்ட, சொட்ட மகள் மின்மினியை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

நகரின் பிரபல இன்ஜினியரிங் கல்லுாரியில் படிக்கும், 18 வயதாகும் மின்மினிக்கு எப்போதும் மனதில் ஒரு பயம், நடுக்கம். எளிதில் உணர்ச்சி வசப்படும் மனோ நிலையில் இருப்பார்.

ஒருவர் மீது அன்பு செலுத்துவது என்றால், அவரை போல யாரும் இருக்க முடியாது என்பது போல, அதீத பாசம் காட்டுவார். அவருக்கு தேவையானதை பெற்றுத்தர, எந்த அளவுக்கு வேண்டுமானாலும், கீழே இறங்கி, காரியம் சாதிக்க தயங்க மாட்டார்.

அதே போல, கோபம் கொண்டாலும் சரி, அதை வெளிக்காட்டுவதில் பயங்கரமாக நடந்து கொள்வார். பின், விளைவுகள் பற்றி யோசனையே இருக்காது. பின்விளைவுகள் பற்றி சிந்திக்காமல்தான், இப்படி கையை கீறிக் கொண்டுள்ளார் மின்மினி.

கே.எம்.சி.எச்., மருத்துவமனை மனநல மருத்துவர் ஸ்ரீநிதி, மின்மினி மற்றும் அவரது தாயாரிடம் தனித்தனியாக பேசினார். அவர் 'பார்டர் லைன் பர்சனாலிட்டி' எனும் பிரச்னையால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இத்தகைய நபர்களுக்கு மன ரீதியாக என்ன பிரச்னை, இவர்களை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து, டாக்டர் ஸ்ரீநிதி கூறியதாவது: வீட்டில் குழந்தையாக இருக்கும் போது, அம்மா, அப்பா இடையே அடிக்கடி நிகழும் சண்டை சச்சரவுகளால் ஏற்படும் பாதிப்பு, டீன் ஏஜ்ஜில் பிரமாண்டமாக வெடிக்கிறது.இத்தகைய குழந்தைகள் உணர்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருப்பதால், அத்தகைய நேரத்தில் எந்த முடிவையும், எடுக்கத் தயங்க மாட்டார்கள்.

இத்தகைய மனநிலையில் உள்ளவர்களின் கைகளை பார்த்தாலே, கீறல் காயம் பட்ட தழும்புகள் இருக்கும். அதை மறைக்க, முழுக்கை சட்டை அணியும் பழக்கமும் இருக்கும்.இவர்களுடைய வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருக்கும். ஆனாலும், இவர்கள் சிறந்த நண்பர்கள். பிறரின் கஷ்டத்தை எளிதாக புரிந்து கொள்ளும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பர்.எளிதில் காதலில் விழுந்து விடுவார்கள். அந்த உறவுக்காக, தன் உடலை கூட விட்டுத்தர தயங்க மாட்டார்கள். அடிக்கடி ஏமாற்றப்படுவதால், சிறு வயதிலேயே பல காதல் அனுபவங்களை பெற்று விடுவார்கள். பிறருடைய கஷ்டத்துக்கு வழி சொல்வார்கள். ஆனால், தன் கஷ்டத்துக்கு தீர்வு காண முடியாதவர்களாக இருப்பர்.

என்னதான் சிகிச்சைஇவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வுகளை, போதுமான மருந்துகள் கொடுத்து குணப்படுத்தலாம். மனதை ஒருநிலைப்படுத்தி, மன அழுத்தத்தையும் குறைக்கலாம். குறிப்பாக, Dialectical theraphy வாயிலாக குணப்படுத்தலாம்.

இத்தகைய மனநல பாதிப்புள்ளவர்கள், கையில் இருக்கக்கூடிய நேரத்தில் கவனம் செலுத்துவது, உறவுகளில் வரும் ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்துவது, உறவு முறைகளை கையாளுவது, கஷ்டங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்வது என, நான்கு வகை செயல்பாடுகள் வாயிலாக குணப்படுத்தலாம்.

இதனால் அவர்களின் எதிர்மறை உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து, யதார்த்த உலகுக்கு அழைத்து வரலாம். இது இளமை பருவத்தில்தான் அதிகமாக காணப்படும். இதை குணப்படுத்த நல்ல தீர்வுகள் உள்ளன.இவ்வாறு, டாக்டர் ஸ்ரீநிதி கூறினார்.

இதுதான் அறிகுறிகள்!

இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் படிப்பு, காதல், எதிர்காலம் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறுவார்கள். சில நேரம் மிகவும் சந்தோஷமாகவும், சில நேரம் மிகவும் கவலையாகவும் இருப்பார்கள். இவர்களின் அனைத்து உணர்ச்சிகளும், ரொம்பவும் உச்சமாக இருக்கும். இதில், குறிப்பாக, ஆண்களில் பலர் மதுபழக்கத்துக்கு, அடிமையாக மாறி விடுவார்கள். பிளேடால் உடலை கீறிக் கொள்வார்கள். இவர்களின் பிரச்னையை, இவரது தாயால்தான் கண்டுபிடிக்க முடியும்.

டாக்டர் ஸ்ரீநிதி நித்யானந்த்

மனநல மருத்துவர்

99942 84424

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us