sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/நிச்சயமாக குணமாக்கலாம்

நிச்சயமாக குணமாக்கலாம்

நிச்சயமாக குணமாக்கலாம்


PUBLISHED ON : ஆக 20, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மக்கள் பலரும் தற்போது தைராய்டால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள், மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

அயோடின் ஏற்ற இறக்கம், இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால், தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது. என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்னைகளை தைராய்டு நோய். இது, நோய் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை. அயோடின் குறைவே இதற்குக் காரணம். இதில், ஹைப்பர் தைராய்டிசம், ஹைப்போ தைராய்டிசம் என இரு பாதிப்புகள் ஏற்படுகிறது. தைராய்டு ஹார்மோனானது, குறைவான அளவில் சுரப்பதால் ஏற்படுவது ஹைப்போ தைராய்டிசம். தைராய்டு ஹார்மோனானது அளவுக்கு அதிகமாக சுரக்கப்படுவது, ஹைப்பர் தைராய்டிசம். ஆரம்பத்தில் சரி செய்யாவிட்டால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுத்தும்.

ஹைப்பர் தைராய்டிசம் முற்றிய நிலையில் இருந்தால், உடல் எடை, அளவுக்கு அதிகமாக திடீரென்று அதிகரிக்கும். உடல் மிகவும் சோர்வுடன் இருக்கும். பெண்களுக்கு தைராய்டு அதிகமாக இருந்தால், அது தைராக்ஸின் உற்பத்தியை அதிகரித்து, மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கை உண்டாக்கும். குழந்தை பிறப்பதில் பிரச்னை ஏற்படும்.

வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகள். சிலருக்கு கண்கள் பெரிதாக தோன்றும். தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம் அல்லது குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம். தைராய்டு சுரப்பி செயல்பாடு முறையாக இல்லாத போது, கழுத்துப் பகுதி வீக்கமடையும். சில சமயங்களில் கழுத்து வீக்கம், அயோடின் குறைபாட்டினாலும் ஏற்படும்.

ஹைப்பர் தைராய்டு இருந்தால், மன அழுத்தம் ஏற்படும். எந்நேரமும் ஒருவித மன கஷ்டத்துடன், எதையும் சரியாக செய்ய முடியாத நிலையில் இருக்கும். தைராய்டு அதிகமாக இருந்தால், கொலஸ்ட்ராலின் அளவும் அதிகமாக இருக்கும். இதற்கான டயட் மற்றும் மருந்துகள் மேற்கொண்டாலும், குறையாமல் இருந்தால், அது, ஹைப்பர் தைராய்டின் அறிகுறியாகும். ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், குடலியக்கம் சீராக செயல்படாமல், மலச்சிக்கல் பிரச்னை ஏற்படும். மூட்டு வலி மற்றும் கடுமையான உடல் வலி போன்றவையும் தைராய்டு என்பதற்கான அறிகுறிகள்.

மேலும் எந்த ஒரு செயலை செய்தாலும், அதை செய்வது மெதுவாகவும், மந்தமாகவும் இருக்கும். இந்த உபாதை, பெண்களை அதிகமாக பாதிக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர்தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போதல், மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாகக் காணப்படுதல் ஆகியவை, ஹைப்போ தைராய்டு அறிகுறியாகும்.

அளவுக்கு அதிகமான கூந்தல் உதிர்ந்தால், தைராய்டு முற்றியுள்ளதற்கு அறிகுறி. சில சமயங்களில் அவை வழுக்கையையும் உண்டாக்கும். தைராய்டு ஹார்மோன்கள் உடலில் அதிகமாக இருந்தால், அவை தசைகளில் பிடிப்புக்கள் ஏற்படுவதோடு, ஆங்காங்கு வலிகளையும் உண்டாக்கும். இத்தகைய வலிகள் கடுமையாக இருக்கும். அடிக்கடி தூக்கம் வருதல், மறந்துவிட்டு முழித்தல், உடல் எடை போடுவது, சோர்வு அதிகரிப்பு, சிறு விஷயத்துக்கும் டென்ஷன் , எரிச்சல், படபடப்பு ஆகிய அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக்கொள்வது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us