தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஐந்து கிலோ அதிகரிக்கலாம்

ஐந்து கிலோ அதிகரிக்கலாம்

ஐந்து கிலோ அதிகரிக்கலாம்


PUBLISHED ON : டிச 31, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 31, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களின் சராசரி உடல் எடை அடுத்த, 10 ஆண்டுகளுக்கு, 55 கிலோவாக இருக்கலாம்.

தனிநபரின் உடல் எடை, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரையின் அளவு, கொழுப்பு போன்றவை எந்த அளவு இருந்தால் ஆரோக்கியம் என, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, உணவு பழக்கம், வாழ்க்கை முறை இவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

கடந்த, 2010 - 20ல், 20 - 39 வயது வரை உள்ள பெண்களின் சராசரி உயரம், 5 அடி - 152 செ.மீ., ஆக இருந்தால், சராசரி உடல் எடை, 50 கிலோவாகவும், 5.6 அடி - 171 செ.மீ., உயரம் உள்ள ஆண்களின் சராசரி உடல் எடை, 60 கிலோவாகவும் இருப்பது ஆரோக்கியமானது என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

அடுத்த, 10 ஆண்டுகளுக்கு, 2021 - 2030 வரை, பெண்களின் உடல் எடை, தற்போதுள்ள உணவு, வாழ்க்கை முறைக்கு ஏற்ப, 5 கிலோ அதிகமாக இருக்கலாம் என, நிர்ணயம் செய்துள்ளோம். 60 கிலோவாக இருந்த ஆண்களின் உடல் எடை, 65 கிலோவாக இருக்கலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல வயதிலும், உயரத்திலும் கூட மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளாக, 20 - 39 வயது வரை உள்ளவர்களின் உடல் எடை, உயரம் கணக்கில் எடுக்கப்பட்டது.

அடுத்த, 10 ஆண்டுகளில், 19 - 39 வயது வரை உள்ளவர்களுக்கு, 5 கிலோ அதிக உடல் எடை சலுகை தரப்பட்டு உள்ளது.

பெண்களின் சராசரி உயரம், 5.3 அடியும், ஆண்களின் சராசரி உயரம், 5.8 அடியும் இருந்தால், இந்த எடை பொருந்தும்.

கடந்த முறை, நகரத்தில் உள்ளவர்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்ட நிலையில், இம்முறை நகரம், கிராமம் என, அனைத்து தரப்பினரின் வாழ்க்கை முறையும் கவனத்தில் கொள்ளப்பட்டு உள்ளது.

அதிக கலோரிகள் உள்ள உணவை அனைத்து தரப்பினரும் சாப்பிடுவதால், உடல் எடையில், 5 கிலோ அதிகரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

தேசிய ஊட்டச்சத்து அமைப்பு, ஐதராபாத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us