தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இதய, சர்க்கரை நோயாளியாக்கும் மெனோபாஸ்

இதய, சர்க்கரை நோயாளியாக்கும் மெனோபாஸ்

இதய, சர்க்கரை நோயாளியாக்கும் மெனோபாஸ்


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மெனோபாஸ்' என்பது எல்லாப் பெண்களும் எதிர் கொள்ள வேண்டிய பிரச்னை. நம் நாட்டு பெண்களுக்கு, 46 - -51 வயதில், மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிரந்தரமாக நிற்கலாம். 40 வயதிற்கு முன் மாதவிடாய் வருவது நின்றால், அதற்கு 'பிரீ மெச்சூர் மெனோபாஸ்' என்று பெயர். ஐந்து சதவீதத்திற்கும் குறைவான பெண்களுக்கே இது இருக் கும்.

குறிப்பாக, பெருநகரங்களில் வாழும் பெண்களும், அந்நகரங்களின் குடிசைப் பகுதியில் வாழும் பெண்களும், வி ரைவாகவே மெனோபாஸ் நிலையை அடைந்து விடுகின்றனர்.

தொடர்ச்சியாக ஒரு வருடம் மாதவிடாய் வராமல் இருந்தால், மெனோபாஸ் என்று புரிந்து கொள்ளலாம்.

எதனால் இந்த மாற்றம்?

பெண் குழந்தை பிறக்கும் போதே, குறிப்பிட்ட எண்ணிக்கையில், கருமுட்டை உற்பத்தி நிர்ணயம் ஆகிறது.

குறிப்பிட்ட வயதில், கருமுட்டை உற்பத்தி குறைந்ததும், கருக்குழாய் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்புகளும் படிப்படியாக குறைந்து விடுகின்றன.

இதனால், ஒவ்வொரு மாதமும் முதிர்ச்சியடைந்து, உடைந்து வெளி வருவதும், முழுவதுமாக நின்று விடுகிறது.

ஏற்படும் பாதிப்புகள்

• பாதிப்புகள்

• எலும்பில்...

ஈஸ்ட்ரோஜென் குறைவதால், எலும்பு திடத்தன்மை குறைந்து, குளவிக்கூடு போல ஆகிவிடும் தன்மை, ஆஸ்டியோபோரோசிஸ். இதில், லேசாக தடுக்கி விழுந்தாலும், எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

எலும்பில் உள்ள தாதுக்கள் குறைவதால், ஆஸ்டியோபீனியா, வரலாம்.

இதனால் வயதான பெண்களுக்கு, முதுகு தண்டின் உயரம் னோபாச்சிற்கு பின், 2 - 3 அங்குலம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கூன் விழுவதற்கான காரணமும் தண்டுவடத்தில் உள்ள எலும்புகள், சுருங்கி, வளைந்து விடுவது தான். தசைகள் வலிமை இழக்கும் சார்கேபீனியா பிரச்னையும் வரலாம்.

இதயத்தில்...

ஈஸ்ட்ரோஜென் என்பது நம் இதயத்தை பாதுகாக்கும் ஹார்மோன். உடலில் உள்ள நல்ல, கெட்ட கொழுப்பின் அளவை சரியாக பராமரிக்கவும் இது உதவுகிறது. இந்த சமச்சீர் தன்மை, குறிப்பிட்ட வயது வரை, பெண்களுக்கு மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

'மெனோபாஸ்' வயதில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைந்து விடுவதால், கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாகி, மாரடைப்பு வரும் அபாயம் அதிகரிக்கிறது.

பொதுவான மாரடைப்பு அறிகுறிகளான, மார்பு வலி அதிக வியர்வை என்று இல்லாமல், வேறு விதமாக கூட வரலாம். இதனால் கண்டுபிடிக்க முடியாமல் போவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.

50 - 57 வயது பெண்கள் தங்களின் இதயத்தை சரியாக பராமரிப்பதில்லை; முறையாக பரிசோதனை செய்து கொள்வதில்லை.

இதனால், ஆஞ்சியோபிளாஸ்டி செய்யாமல், நேரடியாக 'பைபாஸ்' அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு, முதல் முறையே தீவிர இதய பாதிப்புகளுடன் வருவதை, சமீப ஆண்டுகளில் நான் அதிகம் பார்க்கிறேன்.

கொழுப்பு...

இடுப்பு, கை பகுதிகளில் கொழுப்பு அதிகம் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பெண் உறுப்பில் உலர்வுத் தன்மை ஏற்பட்டு, சிறுநீரகத்தை அடக்க முடியாமல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல், தன்னிச்சையாக சிறுநீர் கசிவது, இருமும் போது, தும்மும் போது, தன்னிச்சையாகவே சிறுநீர் கசிவது, உலர்ந்த தன்மையால், உடலுறவின் போது அதீத வலி, எரிச்சல், நமைச்சல் என்று பலவிதமான பிரச்னைகள் வரலாம்.

இதைத் தவிர்க்க, ஈஸ்ட்ரோஜென் கலந்த களிம்புகளை தடவலாம்.

அவரவர் உடலுக்கு தேவையான அளவில் தண்ணீர் குடிப்பது, புரோபயாடிக் அதிகம் உள்ள தயிர், மோர் அதிகமாக சேர்த்துக் கொள்வது, சிறுநீர் கடுப்பைத் தடுக்க உதவும்.

பரிசோதனை

மெனோபாஸ் சமயத்தில், கொழுப்பு அளவு சீராக இல்லாதது, உடல் பருமன் அதிகமாவது, இன்சுலின் ஹார்மோன் சரியானபடி செயல்படாமல், சர்க்கரை நோயாளியாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, ரத்த சர்க்கரை அளவையும், கொழுப்பையும் பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

டாக்டரின் ஆலோசனைப்படி, முழு உடல் பரிசோதனை, மேமோகிராம், பேப்ஸ்மியார், கர்ப்பப்பையில் பிரச்னை உள்ளதா என அறிய ஸ்கேன் பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம்.

வாழ்க்கை முறை மாற்றத்தால், மெனோபாஸ் பிரச்னைகளை சமாளிக்கலாம்.

உடல் எடைக்கு ஏற்ப, 60 கிலோ உடல் எடை இருந்தால், 69 - -65 கிராம் புரதம், முழு தானியங்கள், தயிர், பால், மோர், எள், கேழ்வரகு, முருங்கைக்கீரை போன்ற கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.

'ஸ்ட்ரெத் டிரைனிங்' உடற்பயிற்சிகளை செய்தால், தசைப் பகுதிகள் நன்கு வலுவடைந்து, எலும்பின் திடம் குறையாமல் பாதுகாக்க முடியும்.

டாக்டர் மீரா விவி ராகவன், சிறுநீரகம் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை 98400 14421 muachennai@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us