sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

சர்க்கரையை சுண்டக்காய் ஆக்கும் வெண்டைக்காய்

/

சர்க்கரையை சுண்டக்காய் ஆக்கும் வெண்டைக்காய்

சர்க்கரையை சுண்டக்காய் ஆக்கும் வெண்டைக்காய்

சர்க்கரையை சுண்டக்காய் ஆக்கும் வெண்டைக்காய்


PUBLISHED ON : மே 17, 2015

Google News

PUBLISHED ON : மே 17, 2015


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழ கொழ என்றிருந்தாலும், வெண்டைக்காயை அவ்வளவு சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது. சர்க்கரை நோயையே, சுண்டக்காய் ஆக்கி விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சர்க்கரை நோயை, நோய்களுக்கு எல்லாம் தாய் என்று சொல்வார்கள். இதன் அர்த்தம், சர்க்கரை நோய் வந்து விட்டால் மற்ற எல்லா நோய்களும் வந்து விடும் என்பதுதான்.

சர்க்கரை நோயை பொருத்தவரை, அதை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால், உணவு பழக்கத்தின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். காய்கறிகளில், சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில், வெண்டைக்காய் சரியான காயாக விளங்குகிறது.

இரண்டு வெண்டைக்காய் பிஞ்சுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும். முனைகளை நறுக்கிய பின், அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அதனை கழுவி விடாமல் ஒரு டம்ளர் நீரில், அந்த துண்டுகளை போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் காலையில் எழுந்து அந்த துண்டுகளை நீக்கி விட்டு, நீரை குடிக்க வேண்டும். இதுபோல் தினமும் காலையில் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான் சிறந்த பலனைத் தரும். சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.

எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இச்சத்து உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை ரத்தத்தில் கலக்காமல் தடுக்கும். இவ்வகை சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது. எனவே, வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை கரைக்கும், பெக்டின் என்னும் நார்ப்பொருள் வெண்டையில் உள்ளது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியமும் உள்ளது. 100 கிராம் வெண்டைக்காயில், 66 கலோரி உள்ளது. இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது. வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலஸ்டிரால் கரைந்து, மலச்சிக்கல் நீங்கும். இதனால் குடல் சுத்தமாவதோடு, வாய்நாற்றமும் அகலும்.

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவும். இச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி, பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும், உடம்பை பளபளப்பாக மாற்றவும், அரிய மருந்தாக வெண்டைக்காய் திகழ்கிறது.






      Dinamalar
      Follow us