sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

காளான் தரும் பலம்

/

காளான் தரும் பலம்

காளான் தரும் பலம்

காளான் தரும் பலம்


PUBLISHED ON : ஆக 20, 2017

Google News

PUBLISHED ON : ஆக 20, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காளான், ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பை தடுக்கிறது. இதில், எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் ரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.

உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால், ரத்தம் சுத்தமடைவதுடன் இருதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இருதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்போது, உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். ரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி, உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது.

இதனால், இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையை சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அவ்வகையில், பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான்.

மூட்டு வாதத்துக்கு நிவாரணி: 100 கிராம் காளானில், பொட்டாசியம் சத்து, 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே, இருதயத்தை காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது. காளானில் தாமிரச்சத்து உள்ளதால், ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால், பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோயை குணப்படுத்த பயன்படுகிறது. 100 கிராம் காளானில், 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.

உடல் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது. எளிதில் ஜீரணமாகும் தன்மைகொண்டது. மலச்சிக்கலை தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள், தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண்,

ஆசனப்புண் குணமாகும்.

ஆரோக்கியம் உறுதி: பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை நோய்களை குணப்படுத்தும். காக்காய் வலிப்பு, மூளை நோய், வலிமை குறைவு, மஞ்சள் காமாலை, மூட்டு வலி, தலையில் நீர்கோர்த்தல் உட்பட பல நோய்களை காளான் கட்டுப்படுத்துகிறது. பெண்களுக்கு கருப்பை பிரச்னைகள் வருவது தடுக்கப்படும். தீராத காய்ச்சலுக்கு விரைவில் நல்ல பலனை தரும்.

மார்பக புற்றுநோய் வராமல் இருக்க உதவும்.

சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது. தாம்பத்திய சிக்கல், முதுமை குறைவு, காய்ச்சல், பாக்டீரியா நோய்கள், நரம்பு வலி உட்பட பல நோய்கள் குணமடையும். இதை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்துவிடும். எனவே, வாரம் இருமுறையாவது காளான் உணவை உட்கொள்ளும் போது, உடலில், ஆரோக்கியம் உண்டாவதை கண்கூடாக காண முடியும்.






      Dinamalar
      Follow us