தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நகமும்... ஆரோக்கியமும்...

நகமும்... ஆரோக்கியமும்...

நகமும்... ஆரோக்கியமும்...


PUBLISHED ON : செப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

இளைய தலைமுறையினர், நகங்களை கலைக்கூடமாக்குவதில், போட்டி போட்டுகின்றனர். நகங்களின் மூலம், நம் ஆரோக்கியத்தையும் அறிந்து கொள்ளலாம்.

நகத்தில், 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருப்பதால், வியர்வையையும் வெளியேற்றுகிறது. நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.

ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் வெண்மையாக இருக்கும்.

சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டிருந்தால், நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இருதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல ரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால், நீல நிறத்தில் இருக்கும்.

ரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால், நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.

சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால், நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.

நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால், நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கும். இல்லையெனில், நகங்களுக்கு பாலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட, ரசாயன மாற்றத்தின் காரணமாகவும், மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.

சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால், சொரியாசிஸ் எனும் தோல் வியாதியின் அறிகுறியாகும்.

உடலில் ஏற்படும் மாற்றத்தை நகங்களை வைத்து கணக்கிட்டு கொள்ளலாம். உடல் நலனை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், நகங்களும் பளிச் என இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us