sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரை கேளுங்கள்

/

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்


PUBLISHED ON : செப் 08, 2024

Google News

PUBLISHED ON : செப் 08, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனலட்சுமி, மதுரை: என் மகளுக்கு குழந்தை பிறந்து ஒரு வாரமாகிறது. பால் கொடுத்த பின்னும் குழந்தை அடிக்கடி அழுவதால் பால் போதவில்லை என நினைத்து என் மகள் அழுகிறாள். அடிக்கடி சோர்வடைகிறாள். உண்மையாகவே குழந்தைக்கு பால் போதவில்லை என்றால் என்ன செய்வது.



எந்த அம்மாவுக்கும் தாய்ப்பால் போதவில்லை என்ற குறை வராது. மனம் தான் காரணம். குழந்தை பிறந்தவுடன் வருவது சீம்பால். அது சொட்டு சொட்டாக தான் வரும். இந்த அளவு பால் குழந்தைக்கு போதாது என்று தாய் நினைப்பது தான் காரணம். குழந்தை மார்பில் உறிஞ்சும் போது பால் தானாக சுரக்க ஆரம்பிக்கும். இது தான் இயற்கை.

சர்க்கரை நோயாளிகள், உடற்பருமன் உள்ளவர்களுக்கு, தாமத வயதில் குழந்தை பெற்றவர்களுக்கு சிலநேரங்களில் தாய்ப்பால் சுரப்பதில் பற்றாக்குறை ஏற்படலாம்.

சத்தான சரிவிகித உணவுகளை பின்பற்ற வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள் திட உணவு சாப்பிட ஆரம்பித்த பின் பால் நன்றாக சுரக்க ஆரம்பிக்கும். சுகப்பிரசவமோ, அறுவை சிகிச்சையோ குழந்தை வெளியே வந்தவுடனேயே தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

எவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கு இயல்பாக பால் சுரக்க ஆரம்பிக்கும். மிக அரிதாக பால் சுரப்புக்கென ஒரு சிலருக்கு மருந்துகள் தரவேண்டியிருக்கும். குழந்தை மீண்டும் மீண்டும் அழுவதால் பால் போதவில்லை என நினைத்து ஒருசிலருக்கு மனச்சோர்வு, மனஅழுத்தம் ஏற்படும்.

குழந்தை பாலுக்காக மட்டும் அழுவதில்லை. அழுவது ஒன்றே குழந்தைக்கு தெரிந்த மொழி. சிறுநீர், மலம் கழித்திருக்கலாம், குழந்தை படுத்திருக்கும் நிலையோ கையில் வைத்திருக்கும் நிலையோ அசவுகரியத்தை தந்திருக்கலாம், உடல் சூடு, குளிர்ச்சி எதுவாகவும் இருக்கலாம். காரணத்தை நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

- டாக்டர் ரேவதி ஜானகிராம்

மகப்பேறு சிறப்பு நிபுணர்,மதுரை

நாராயணன், திண்டுக்கல்: சிறுவயதில் ஏற்படும் கண்பார்வை குறைபாடை தடுக்க என்ன செய்யலாம்.

குழந்தைகள் பிறக்கும் போது கண்கள் நேராக உள்ளதா என பார்க்க வேண்டும். 5 வயதிற்குள் கண்களில் எந்த பிரச்னையாக இருந்தாலும் கண்டறிந்து உடனே கண் டாக்டரை அணுக வேண்டும். பார்வை குறைபாடுகள் இருந்தால் உடனே கண்ணாடி அணிய வேண்டும்.

பெற்றோர் அதைப்பற்றி கவலை பட வேண்டாம். கண்ணாடி அணிவதால் கண்கள் தான் பாதுகாக்கப்படுகிறது. சிறுவயது குழந்தைகள் அதிக நேரம் கணினியில் கேம்ஸ் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். அப்படியே விளையாடினாலும் மாலை நேரத்தில் சூரிய வெளிச்சம் படக்கூடிய பகுதிகளில் சென்று குழந்தைகள் விளையாட வேண்டும்.

காய்கறிகள், பழங்களை அதிகளவில் சாப்பிட வேண்டும். நாம் உண்ணும் உணவில் வைட்டமின் ஏ குறைவு இல்லாமல் இருக்க வேண்டும். கீரை, மீன் உணவுகளை தவிர்க்கக்கூடாது.

-டாக்டர் ரவீந்திரன்

கண் மருத்துவ பிரிவு துறைத் தலைவர்

அரசு மருத்துவக்கல்லுாரி திண்டுக்கல்


ஆர்.சுகாசினி, பெரியகுளம்: எனது மகன் தொண்டை வலியால் அவதிப்படுகிறான். இருமல் மருந்து குடித்தும் வலி குறையவில்லை. இருமல் குறைய ஆலோசனை கூறுங்கள்.

அலர்ஜி, அரிப்பு, எரிச்சல் ஆகியவற்றால் தொண்டை புண் ஏற்படுகிறது. தற்போது பருவநிலை மாற்றத்தால் வைரஸாலும், பாக்டீரியாவாலும் ஏற்படலாம். சுற்றுச்சூழல் காரணிகள் மாசுபடுதல், கலங்கலான குடிநீர் குடித்தல், புகைபிடித்தல், உணவு ஒவ்வாமை, அடிக்கடி சுவிங்கம் சுவைப்பது தவறு.

அதனை விழுங்குதல், உணவு ஒவ்வாமை போன்றவையும் தொண்டை வலியை ஏற்படுத்தும். சாதாரண தொண்டை புண் தானாகவே போய்விடும். தொண்டை புண் வந்து விட்டால் இளஞ்சூடான வெந்நீர் அருந்த வேண்டும். கல் உப்பை வெந்நீரில் போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.

- டாக்டர் ஏ.சீனிவாசன்

காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், பெரியகுளம்

எஸ்.ராமநாதன், ராமநாதபுரம்: ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுகிறேன். இதிலிருந்து விடுபடுவதற்கான வழி என்ன.

ஒற்றைத்தலைவலி என்பது தலையின் முன்பகுதியில் இரு புறமும் ஏற்படக்கூடிய நீண்ட நாள் பிரச்னையாகும். தலைவலியோடு வாந்தி, தலைச் சுற்று, மயக்கம், கழுத்துவலி போன்ற சிறு, சிறு பிரச்னைகள் ஏற்பட்டு அன்றாட வேலைகளை செய்ய முடியாத அளவில் பாதிப்பு ஏற்படும்.

இது சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரையும் பாதிக்கும். ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. சரியான துாக்கம் இல்லாமை, மனதை கவலையாகவும், வருத்தமாகவும் வைத்துக்கொள்ளுதல், சாக்லேட், கேக் போன்ற வைரமின் என்ற வேதிப்பொருட்கள் அடங்கிய பொருட்களை தவிர்க்க வேண்டும்.

தலைவலி ஏற்படும் நேரத்தில் அதற்கென மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். முன்கூட்டியே தலை வலி வராமல் இருப்பதற்கான மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். சரியான நேரத்தில் டாக்டர்களை அணுகி ஆலோசனை பெற்று தலைவலி வரும் முன் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

-டாக்டர் ஆர்.மலையரசு

நரம்பியல் சிறப்பு மருத்துவர்

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்


மா.மாரிமுத்து, சிவகங்கை: பல் சொத்தை ஏன் ஏற்படுகிறது

பல்லில் கனிமங்களின் மாற்றம் நிகழும் போது பல் கட்டமைப்பில் உருவாகும் ஒரு துவாரமே பல் சொத்தை. உலக மக்கள் தொகையில் 32 சதவீதம் மக்கள் பல் சொத்தையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சூடாக அல்லது குளிர்ச்சியாக உண்ணும்போது ஏற்படும் உணர்திறன், உணவினை கடித்து உண்ணும்போது ஏற்படும் வலி அல்லது அசவுகரியம், பல்லின் நிறம் மாறுதல், ஈறுகளில் வீக்கம், தொடர்ந்து தாங்கமுடியாத வலியை உணர்ந்தால் டாக்டரிடம் பல் பரிசோதனை செய்ய வேண்டும்.

பல்லில் துவாரம் பரவியிருக்கும் அளவினைப் பொறுத்து டாக்டர் சிகிச்சை முறையை தொடங்குவார். ஊட்டச்சத்து உணவுகளை உண்ண வேண்டும். குறைந்த சர்க்கரை உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

- டாக்டர் ஜெ.விஜயபாரத்

பல் மருத்துவர்

அரசு மருத்துவமனை

காளையார்கோவில்


மா.கிருஷ்ணன், ராஜபாளையம்: குழந்தைகளுக்கு குடல் தொற்று நோய் வர காரணம் என்ன

குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். மற்ற உணவு, வேறு வகையான பால் கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் குடல் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடல் தொற்று நோய் பரவும். இந்நோய் பரவிய உடன் ரத்தப்போக்கு அதிகமாகும். இதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை.

- டாக்டர் பி.ராஜசேகர்

குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர்

காரியாபட்டி






      Dinamalar
      Follow us