sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

சீரற்ற ஹார்மோன் செயல்பாடு எப்படி ஏற்படுகிறது?

/

சீரற்ற ஹார்மோன் செயல்பாடு எப்படி ஏற்படுகிறது?

சீரற்ற ஹார்மோன் செயல்பாடு எப்படி ஏற்படுகிறது?

சீரற்ற ஹார்மோன் செயல்பாடு எப்படி ஏற்படுகிறது?


PUBLISHED ON : செப் 08, 2024

Google News

PUBLISHED ON : செப் 08, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி.சி.ஓ.எஸ்., எனப்படும் நீர்க்கட்டி, பைப்ராய்டு என்கிற சதைக்கட்டி, எண்டோமெட்ரியம் என்ற கர்ப்பப்பையின் வெளிப்புறச் சுவரில் கோளாறு போன்றவை 10ல் ஒன்பது பெண்களுக்கு உள்ளன.

இதற்கு முக்கிய காரணம், ஹார்மோன் சமச்சீரற்ற தன்மை என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், எப்படி என்பது புரிவதில்லை.

அந்தக் காலத்தில் காலையில் எழுந்திருந்து, இரவு வரை உடல் உழைப்பு சார்ந்ததாக செயல்பாடுகள் இருந்தன. இன்று இயந்திரங்களை சார்ந்து வாழ்கிறோம். போதுமான அளவு உடலுக்கு வேலை தருவதில்லை. அடுத்தது, எல்லா நேரமும் ஏதோ ஒரு விஷயத்திற்காக மன அழுத்தத்துடனேயே இருக்கிறோம்.

மனது பாதித்தால் அது உடலையும் பாதிக்கும். மன அழுத்தம் அதாவது ஸ்ட்ரெஸ் இருந்தால், இதயம் வேகமாக துடிக்கும்; மூச்சிரைக்கும்; ரத்த அழுத்தம் அதிகரிக்கும்; ரத்த சர்க்கரை அளவு கூடலாம். இயல்புக்கு மாறான இந்த செயல்பாடுகளை இயல்பாக மாற்றுவதற்கு, அட்ரினலின் என்ற சுரப்பியில் இருந்து கார்ட்டிசால் என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும்.

சிறிது நேரம் மன அழுத்தத்தில் இருந்தோம். வேலை முடிந்ததும் சரியாகி விட்டது என்றால், கார்ட்டிசால் ஹார்மோன் சுரப்பும் குறைந்து விடும்.

மாறாக, எல்லா நேரமும் மன அழுத்தத்தில் இருந்தால், அதீத உடல் செயல்பாடுகளை குறைக்க, அதிக அளவில் கார்ட்டிசால் சுரக்கும். ஒரு கட்டத்தில் தன்னால் முடியவில்லை என்றதும், மற்ற ஹார்மோன்களை துணைக்கு வலுக்கட்டாயமாக இழுக்கும்.

வளர்சிதை மாற்றத்திற்கு காரணமான தைராய்டு, மாதவிடாய் வருவதற்கு காரணமான ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்களை மன அழுத்தத்தை குறைக்கும் பணிக்கு உபயோகித்துக் கொள்ளும். ஆண்களுக்கு டெஸ்ட்டோஸ்டீரான் ஹார்மோனை பயன்படுத்தும்.

இதனால் தான் ஹார்மோன் சமச்சீரற்ற தன்மை உருவாகிறது.



இயற்கை மருத்துவம்


இயற்கை மருத்துவத்தின் தத்துவமே காரணத்தைக் கண்டறிந்து சரி செய்வது. அறிகுறிகளை வைத்து நோயாளியை நாங்கள் பார்ப்பது கிடையாது. பி.சி.ஓ.எஸ்., பிரச்னைக்கு, சக்தி பந்தாசனம் என்ற தொடர் ஆசன முறைகளை கற்றுத் தருவோம்.

மரம் வெட்டுவது, படகு ஓட்டுவது, பட்டாம் பூச்சி பறப்பது போன்ற பல்வேறு ஆசனங்கள் இதில் இடம் பெறும். இதனால், இடுப்பெலும்பு, கர்ப்பப்பை தசைகளை வலிமையாக்கி, ஹார்மோன் செயல்பாட்டை சீராக்குகிறது.



டாக்டர் ஒய்.தீபா, தலைவர், கைநுட்பத்துறை, அரசு இயற்கை, யோகா மருத்துவமனை, சென்னை 044 - 2622 2515sakshaayaan@gmail.com






      Dinamalar
      Follow us