sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

நல்லதை செய்பவர்கள் வெறும் 30 சதவீதம்

/

நல்லதை செய்பவர்கள் வெறும் 30 சதவீதம்

நல்லதை செய்பவர்கள் வெறும் 30 சதவீதம்

நல்லதை செய்பவர்கள் வெறும் 30 சதவீதம்


PUBLISHED ON : ஆக 04, 2024

Google News

PUBLISHED ON : ஆக 04, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐ.டி., துறையில் வேலை செய்பவர்கள், தாய்ப்பால் தருவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இணையதளத்தில் தேடி படிக்கின்றனர். தாய்ப்பால் மட்டும் கொடுப்பதால், குழந்தையின் அறிவாற்றல் நன்றாக இருக்கும். கேன்சர் வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். ஆஸ்துமா வராது என்று தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றனர்.

இவையெல்லாம் 100 சதவீதம் உண்மை தான். இதையெல்லாம் படித்து தெரிந்து கொள்பவர்கள், எப்படி தாய்ப்பால் கொடுப்பது என்பதை நடைமுறையில் கற்றுக் கொள்வதில்லை. குழந்தையை எப்படி துக்கி, ஆதரவாக மடியில் வைத்து, பாலை உறிஞ்சுவதற்கு ஏற்ப மார்பு காம்பை குழந்தையின் வாயில் எப்படி வைப்பது, என்று தெரிவதில்லை.

நடுத்தர, அதற்கும் கீழ் உள்ள பெண்கள், தாய்ப்பால் தர முடியாத சூழ்நிலைகளில் புட்டிப் பால் தந்து விடுகின்றனர். படித்தவர்கள், பொருளாதார நிலையில் மேம்பட்டவர்கள், தாய்ப்பால் தவிர வேறு எதுவும் தரக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். எப்படி தர வேண்டும் என்பதையும், ஒரு நாளைக்கு ஆறு _ எட்டு முறை தாய்பால் குடிக்கும் குழந்தையின் உடல், மன வளர்ச்சி எந்த அளவு சிறப்பாக இருக்கும் என்பதையும் அனுபவத்தில் தெரிந்த கொள்ள வேண்டியது அவசியம்.

தாய்ப்பால் குடித்தால், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருக்காது. கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும். பால் குடித்த இரண்டு மணி நேரம் நிம்மதியாக உறங்கும். விளையாடும்.

தாய்ப்பால் தான் சிறந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஆனாலும், சரியாக கொடுப்பவர்கள் வெறும் 30 சதவீதம் மட்டுமே. 70 சதவீதம் பேர் சூழ்நிலைகளை காரணம் காட்டி தவிர்க்கவே செய்கின்றனர். நேரடியாக நாங்கள் செய்த ஆய்வில் தெரிந்த விஷயம் இது.

நிறைமாத கர்ப்பம் என்பது 40 வாரங்கள். அதற்கு முன்பாக 34, 36 வாரங்களில் பிறக்கும் குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் தர வேண்டும். புட்டிப்பால் கொடுத்தால், தொற்றுகள் ஏற்படுவதோடு, குடலில் புண்கள் ஏற்பட்டு அழுகும் நிலையும் வரலாம்.

காலிபிளவர் மூளை

உலக சுகாதார மையத்தில் இதை ஒரு வரைபடத்தின் வாயிலாக விளக்கி இருப்பர். நிறை மாதத்தில் பிறந்த குழந்தையின் மூளை, குறைப்பிரசவக் குழந்தையின் மூளை இரண்டையும் அருகருகே படம் போட்டிருப்பர். 36 வார குழந்தையின் மூளை உருளைக்கிழங்கு போன்று இருக்கும். அதுவே 40 வாரத்தில் பிறந்த குழந்தையின் மூளை காலிபிளவர் போன்று சுருக்கங்களுடன் இருக்கும். முழுமையாக உருவான மூளை, காலிபிளவர் போல அங்கங்கே ஏற்ற இறக்கங்கள் சுருக்கங்கள் போன்று இருக்கும். தாய்ப்பால் கொடுக்கும் போதுதான் மூளை ஆரோக்கியமாக இருக்கும்.

டாக்டர் தீபா ஹரிஹரன்,

இயக்குனர்,

பச்சிளங் குழந்தைகள் சிறப்பு பிரிவு,சூர்யா மருத்துவமனை,சென்னை

044 - 2376 1750






      Dinamalar
      Follow us