sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/அறுவை சிகிச்சையின் வரப்பிரசாதம் லேப்ராஸ்கோப்பி

அறுவை சிகிச்சையின் வரப்பிரசாதம் லேப்ராஸ்கோப்பி

அறுவை சிகிச்சையின் வரப்பிரசாதம் லேப்ராஸ்கோப்பி


PUBLISHED ON : ஆக 04, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 04, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லேப்ராஸ்கோப்பி என்பது வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப் பயன்படும் ஒரு நவீன கருவி ஆகும். வயிற்றுப் பகுதியில் 10 மி.மீ., 5 மி.மீ., அளவிலான சிறிய துளைகள் இட்டு அதன் வழியாக நீளமான கேமரா மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை பயன்படுத்தி வயிற்றின் உள் பகுதியில் உள்ள குடல், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், கர்பப்பை, சினைப்பை, அனைத்து வயிற்றுப் பகுதிகளையும் வெளிச்சமாகவும், 10 மடங்கு பெரியதாக்கி தெளிவாகவும் பார்க்க முடியும்.

இந்த நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப காலத்தில் ஹெச்.டி. லெப்ராஸ்கோப்பி திரையில் அறுவை சிகிச்சை செய்யும் பகுதிகளை மிகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் பார்த்து பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்ய முடியும். தற்போது 3 டி தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. லேப்ராஸ்கோப்பி என்பது அறுவை சிகிச்சை முறைகளில் ஒரு வரப்பிரசாதம், பாதுகாப்பானது. மில்லிமீட்டர் அளவிலான சிறிய தழும்பு மட்டுமே ஏற்படும். குறுகிய காலம் மட்டும் மருத்துவமனையில் தங்கினால் போதும்.

விரைவில் குணமாகி வேலைக்கு சென்று விடலாம் என்பவை இதன் சிறப்பம்சங்கள். லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையில் அப்பண்டிக்ஸ், பித்தப்பை, குடல்நோய், வயிறு உள் பரிசோதனை, கர்பப்பை, சினைப்பை அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகிறது. மேற்கூறிய நவீன அறுவை சிகிச்சைகள் அனைத்தும் இப்போது நமது ஊரிலேயே மக்களின் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

டாக்டர் வீர. திருலோக சந்திரன்,

திண்டுக்கல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us