sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

இயற்கையின் வரம் முருங்கைக் கீரை!

/

இயற்கையின் வரம் முருங்கைக் கீரை!

இயற்கையின் வரம் முருங்கைக் கீரை!

இயற்கையின் வரம் முருங்கைக் கீரை!


PUBLISHED ON : செப் 10, 2017

Google News

PUBLISHED ON : செப் 10, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீரைகள் உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தான் உணவே மருந்து, மருந்தே உணவு என்று நம் முன்னோர் கூறியுள்ளனர்.

நாகரிக உலகில், கீரை சமைப்பதை வேலைப்பளுவாக கருதும் பெண்கள் அதிகரித்து விட்டனர். விளைவு, கீரைகளின் மூலம், இயற்கையாக நம் முன்னோர் பெற்று வந்த பல்வேறு மருத்துவ பயன்பாடுகள், நமக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டு விட்டது.

கீரைகளில், பணம் கொடுக்காமல், பக்கத்து வீடுகளில் ஓசிக்கு கிடைக்கும் கீரை முருங்கை. இது, செலவே இல்லாமல், உடலுக்கு அதிக பலன் தரக்கூடியது. இந்த கீரையும், அதன் பூக்களும், இயற்கை மனிதர்களுக்கு கொடுத்த வரம் எனலாம். அந்தளவுக்கு, அதில் பயன்கள் நிரம்பியுள்ளன.

முருங்கை கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்புச் சத்து உள்ளது. முருங்கை இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளன. வைட்டமின்கள் பி, சி, கே, புரோ விட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.

முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை, கால், அசதி நீங்கும். முருங்கைக் கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாகப் பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரை பெருக்கும்.

முருங்கை கீரையை உணவுடன் அதிகம் வேகவிடாத பொரியலாக சமைத்து உண்ண கழுத்து வலி படிப்படியாக நிவாரணம் கிடைக்கும். முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும். பிசின் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து தும்மல் உண்டாக்கும். நாள்பட்ட கோழை, காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றைப் போக்கும்; வியர்வையைப் பெருக்கும்.

முருங்கைப் பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தப்படுத்தி, அதை 250 மி.லி., பசும்பாலில் கொதிக்க வைத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து, ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடித்து வர ஆண்மை பெருகும். நரம்புத் தளர்ச்சியும் நீங்கும். ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.

முருங்கைப் பூவை சம அளவு துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் சாப்பிட்டால், கண் எரிச்சல், வாய் நீர் ஊறல், வாய்க் கசப்பு மாறும். முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து, காலை மாலை அருந்தி வந்தால் உடலுள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

பெண்கள் மாத விலக்கு காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவர். இவர்கள் முருங்கைப்

பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் உபாதைகள் குறையும்.






      Dinamalar
      Follow us