sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/உப்புக்கு மாற்று

உப்புக்கு மாற்று

உப்புக்கு மாற்று


PUBLISHED ON : செப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உண்ணும் உணவில் சுவையை வெளிப்படுத்த சேர்க்கப்படும் உப்பின் ருசிக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பர். இது, ஓரளவுக்கு உண்மைதான்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு, முக்கியக் காரணம், அதில் உப்பு சேர்த்திருப்பதால் தான்.

உணவுகளில் போதிய அளவு சோடியம் இருக்க வேண்டியது அவசியம். இத்தகைய சோடியத்தை உப்பிலிருந்து மட்டும் தான் பெற வேண்டுமென்பதில்லை, உணவுகளில் சுவைக்கும், மணத்திற்கும் சேர்க்கப்படும் ஒருசில மூலிகைகளிலும் சோடியம் உள்ளது. இந்த மூலிகைப் பொருட்கள் சுவை மற்றும் மணம் கொடுப்பதோடு, மருத்துவ குணங்களும் வாய்ந்தவை. இதனால் உடலில் எந்த ஒரு பிரச்னையும் வராமல் இருக்கும்.

இப்போது அத்தகைய உப்பிற்கு பதிலாக உணவிற்கு சுவையை தரும் ஆரோக்கியமான மூலிகைப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம். இத்தகைய மூலிகைப் பொருட்களால், உணவானது சுவையுடன் இருப்பதோடு, உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எனவே குறைந்த அளவுள்ள சோடியம் இருக்கும் மூலிகைப் பொருட்களை உணவுகளில் பயன்படுத்தி, ஆரோக்கியத்தையும், சுவையையும் பெறலாம்.

பட்டை: மசாலாப் பொருட்களில் ஒன்றாக பயன்படும் பட்டை, இந்தியா, இலங்கை மற்றும் ஆசியாவின் பல இடங்களில் சமைக்கப்படும் உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உணவுக்கு சுவை கிடைப்பதோடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் சீராக இருப்பதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் செய்யும்.

ஏலக்காய்: ஏலக்காய் போட்டு சமைத்தால், உணவானது மணத்துடன் இருப்பதோடு, வித்தியாசமான சுவையும் கிடைக்கும். குறிப்பாக இதை சீரகம் மற்றும் மல்லியுடன் சேர்த்து சமையலில் சேர்க்கும் போது, இதன் சுவை மற்றும் மணத்திற்கு அளவே இல்லை.

சிவப்பு மிளகாய்: சிவப்பு மிளகாய் வெறும் காரத்திற்காக மட்டும் பயன்படுவதில்லை. இது உணவில் காரத்துடன், ஒரு நல்ல சுவை தரும் பொருளாகவும் பயன்படுகிறது.

பிரியாணி இலை: பொதுவாக பிரியாணி இலை பிரியாணிகளில் மட்டும் தான் சுவைக்காக பயன்படுத்துவோம். ஆனால் அத்தகைய பிரியாணி இலை சற்று இனிப்பு சுவையுடன், மிகுந்த மணமுடன் இருக்கும். எனவே தான், இதை உணவுகளில் சேர்த்தால், சுவை பிரமாதமாக இருக்கும்.

மிளகு தூள்: மிளகு தூளுக்கும் உப்புக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை. எப்படி உப்பை உணவில் சேர்க்கிறோமோ, அதேப் போல் தான் மிளகு தூளையும் சேர்க்கிறோம். உப்பில்லாமல், வெறும் மிளகுத் தூளை மட்டும் சேர்த்தாலும், உணவில் சூப்பரான சுவையைப் பெறலாம்.

சோயா சாஸ்: சோயா சாஸை கூட உப்பிற்கு பதிலாக பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் சரியான அளவில் உப்பு இருப்பதால், அதை சமைக்கும் போது பயன்படுத்த நல்ல சுவை கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, சோயா சாஸில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சத்துக்கள் உள்ளன.

வெங்காயப் பொடி: காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் மிகவும் காரமான சுவையுடையது. எனவே இதை உணவில் சரியான அளவில் சேர்த்தால், சரியான ருசியைப் பெறலாம்.

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாற்றிலும் சூப்பரான சுவை உள்ளது. அதிலும் நல்ல புதிய எலுமிச்சையை நறுக்கிப் பயன்படுத்துவது சிறந்த ருசியைத் தரும். அதுவே காய்ந்த எலுமிச்சையை பயன்படுத்தினால், பின் உணவில் சுவையே மாறிவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us