sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம்

/

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம்

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம்

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம்


PUBLISHED ON : செப் 14, 2014

Google News

PUBLISHED ON : செப் 14, 2014


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில், நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால், அன்றாட உணவில், ஏதாவது ஒரு பழத்தையும் சேர்த்து கொண்டால் நல்லது என்கிறது, மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள். எந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பதற்கு, இதோ சில டிப்ஸ்:

எலுமிச்சை

✔ அதிகமான பேதி ஏற்பட்டால், ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை, அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால், உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க, எலுமிச்சை பழத்தை கடித்து, சாற்றை உறிஞ்சி குடித்தால், உடனே களைப்பு தீரும்.

✔ கபம் கட்டி, இருமலால் கஷ்டப்படுகிறவர், ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து, 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி நலம் ஏற்படும்.

திராட்சை

✔ பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளுக்கு, திராட்சை சாறு ஒரு சிறந்த மருந்து. தள்ளிப் போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு, கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில், சிறிது சர்க்கரை சேர்த்து, தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். தொடர்ந்து, 21 நாட்கள் சாப்பிட வேண்டும்.

பேரீச்சை

✔ தினமும், இரவில் படுக்க செல்லும் முன், ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீச்சம் பழத்தையும் உண்டு வந்தால், உடல் பலம் பெறும். ரத்த விருத்தியும் உண்டாகும்.

✔ தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்க, தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடலாம். கண் சம்பந்தமான கோளாறுகளும், நரம்பு சம்பந்தமான கோளாறுகளும் நீங்கும்.

ஆரஞ்சு

✔ ஆரஞ்சில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பி மற்றும் பி-2 உள்ளன. இதில், சுண்ணாம்புச் சத்தும் அதிகம். பல நாள் வியாதியில் இருந்து எழுந்தவர்களுக்கு, இது இயற்கை அளித்த சத்து மருந்து.

✔ இரவில் துாக்கமில்லாமல் கஷ்டப்படுபவர், படுக்க போவதற்கு முன், அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட்டால், செமையாக துாக்கம் வரும்.

வாழை

✔ மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்

பட்டவர், தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் இரவு உணவிற்கு பின், ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், ஜீரண சக்தி உண்டாகும்.

✔ கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன், தினசரி உணவில் செவ்வாழைப் பழம் வேளைக்கு ஒன்று வீதம், 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால், பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.

பலா

✔ இதில் வைட்டமின் ஏ மற்றும் உயிர்ச்சத்து அதிகம். சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் 'ஏ'க்கு, தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால், உடலில் நோய் தொற்றாது.

பப்பாளி

✔ ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியது. பல் தொடர்பான குறைபாட்டுக்கும், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி உதவும். நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை அதிகரிக்கவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை பெருக்கவும் பப்பாளி கை கொடுக்கும்.

✔ பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக் கிருமிகளை கொல்லும், ஒரு வகை சத்து உள்ளது. பப்பாளி பழம் சாப்பிடுபவர்களின் ரத்தத்தில், நோய் கிருமிகள் தங்குவதை அது தடுத்து விடும்.

மாதுளை

✔ மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர், தொடர்ந்து மூன்று நாள் மாதுளம் பழம் சாப்பிட்டால், குணம் பெறலாம்.

✔ வறட்டு இருமல் உள்ளவர் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்தம் சம்பந்தமான குறைபாட்டிற்கும் மாதுளம் பழம் ஏற்றது.

கொய்யா

✔ எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கும். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் உண்பது நல்லது. விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால், வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால், அதை உடனே கொன்று விடும்.

அன்னாசி

✔ உடலில் போதிய ரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு, அன்னாசிப்பழம் சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை, சிறு சிறு துண்டுகளாக செய்து வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து, தினமும் இரவில் ஒரு டம்ளர் பாலில், ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து பருக வேண்டும்; 40 நாட்களில் ரத்தம் அதிகரித்திருக்கும்.






      Dinamalar
      Follow us