sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/குழந்தையின்மைக்கு அதிநவீன சிகிச்சை வேண்டுமா?

குழந்தையின்மைக்கு அதிநவீன சிகிச்சை வேண்டுமா?

குழந்தையின்மைக்கு அதிநவீன சிகிச்சை வேண்டுமா?


PUBLISHED ON : டிச 19, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2014


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

'குழந்தைகள் இல்லை' என்பது ஒரு குடும்பப் பிரச்னையாகவும், சமூகப் பிரச்னையாகவும் உள்ளது. குழந்தையின்மைக்கான சிகிச்சையில் அறிவியலும், ஆராய்ச்சியும் பெரும் பங்காற்றி வருகின்றன. பல நவீன சிகிச்சை முறைகள் இப்போது உள்ளன. கடந்த, 1990ல் குழந்தையின்மை சிகிச்சையில், 10 சதவீதம் வெற்றி கிடைத்தது. இப்போது குழந்தையின்மைக்கு மிகச் சிறு காரணமாக இருந்தாலும் அது எது என்று கண்டறிந்து தனித்தனி சிகிச்சையளிக்க முடியும்.

ஸ்கேனில் 3டி, 4டி டாப்லர் (ரத்த ஓட்டம் பார்ப்பது) ஆகிய நவீன வசதிகள் உள்ளன. இதனால், கர்ப்பப் பையில், சினைப்பையில், கருக்குழாயில் உள்ள குறைகளை 'ஹிஸ்டீரோ சால்பின்கோக்ராம் என்னும் எக்ஸ்-ரே எடுத்து குழந்தை வளரும் இடத்தில் உள்ள குறைபாடுகள், கருக்குழாயில் உள்ள அடைப்புகள், நீர் கோர்த்தல் ஆகியற்றைக் கண்டுபிடிக்கலாம்.

ஆண்களுக்கு கணினி மூலம் விந்து ஆராய்தல் என்னும் முறையில் மரபணுவில் உள்ள குறைபாடுகளையும் கண்டுபிடிக்கலாம். நுட்பமான முறையில் விந்தின் குறைகளைக் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை அளித்தால் வெற்றி அடையலாம். ஆண்கள் வயது அதிகரிக்கும் பட்சத்தில் இத்தகைய குறைபாடுகள் அதிகரிக்கின்றன.

மருந்துகள் மூலமும், லாப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள் மூலமும் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்யலாம். கர்ப்பப்பையிலும், சினைப்பையிலும், கருக்குழாயிலும் ஏற்படும் நார்க் கட்டிகள், நீர்க் கட்டிகள், ரத்தக் கட்டிகள், நீர் கோர்த்தல் போன்றவற்றை ஸ்கேனில் 3டி லாப்ரோஸ்கோப்பி, ஹிஸ்ட்ராஸ் கோப்பி மூலம் சிகிச்சைஅளித்து முழுமையாகக் குணப்படுத்தலாம்.

3டி லாப்ரோஸ்கோப்பி முதன்முறையாக சென்னையில், பிரசாந்த் ஆராய்ச்சி மையத்தில் தான் உபயோகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மிக நுட்பமான அறுவை சிகிச்சை செய்வதால் ரத்தக் கசிவு குறைவாக உள்ளது.

கட்டிகளை எடுத்தபின் தையல் போட்டு, அதை சாதாரண நிலைக்கு எடுத்த வருவதால், கர்ப்பம் அடையும் வாய்ப்பும் கர்ப்பத்தில் எந்த விதமான சிக்கல்களும் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் உபயோகமாக இருக்கிறது. 3டி விஞ்ஞானத்தின் மகிமை இது என்று கூறலாம்.

மீதமுள்ள, 10 சதவீத பெண்களுக்கு கருப்பையில் விந்து செலுத்துதல் (ஐ.யு.ஐ) அல்லது டெஸ்ட்டியூப் பேபி (ஐ.வி.எப் அல்லது இக்சி) விந்தை முட்டையில் செலுத்துதல் முறை தேவைப்படுகிறது. ஐ.யு.ஐ ஆறுமுறை தோல்வி அடைந்தால், ஐ.சி.எஸ்.ஐ முறைக்கு மாறுவது நல்ல பயனை அளிக்கும்.

கடந்த, 1990ம் ஆண்டு ஐ.வி.எப் முறையில், 8-10 சதவீத பெண்களுக்கு கர்ப்பமாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால், இன்றைய நவீன விஞ்ஞான முறைகளினால், 60-85 சதவீதம் வரை கர்ப்பமாகும் வாய்ப்பு உள்ளது. இது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் யோசிக்கலாம். நவீன கருவிகளையும், முறைகளையும் உபயோகிப்பதே இந்த மகத்தான வெற்றிக்கு காரணம்.

ஐ.வி.எப் லேப்பில் ஹ்யுமிமிடிக்ரிப் என்னும் முட்டையையும், கருவையும் நம் உடலில் இருக்கும் வெப்பநிலை, ஆக்சிஜன் போன்ற வாயுக்களையும், நம் உடலில் இருக்கும் நிலை ஆகியவற்றுடன் வைக்க உதவுவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இதைத் தவிர, லேசர் கணினி உபயோகிப்பதால், 38 வயது தாண்டியவர்களுக்கும், பலமுறை தோல்வி அடைந்தவர்களுக்கும் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஐந்தாவது நாள் கருவை (பிளாஸ்டோசிஸ்ட்) கர்ப்பப்பையில் செலுத்துவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. வெற்றி அடையும் வாய்ப்பை அதிகரிக்க முட்டை, விந்து, கர்ப்பப்பை இவை மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும். முட்டை வளர்ச்சியை யும், அதன் தன்மையும் முதல் தரமாக ஆக்குவதற்கு சிறப்பு மருந்துகளும், யோகா, அக்குபஞ்சர், இசை ஆகியவையும் மிக உபயோகமாக உள்ளன.

எல்லாருக்கும் எவ்வளவு வயதானாலும் அவர்களுடைய முட்டைதான் வேண்டும் என்று நினைப்பது சகஜம். இன்றைய மருந்துகளும், உபயோகிக்கும் முறையில் உள்ள முன்னேற்றங்களும் இதற்கு மிகவும் உதவுகின்றன. 'ஐ.வி.எப் லைட் புரோட்டாக்கால்' என்ற முறையைக் கடைப்பிடித்து பின், 42 வயது வரை உள்ள பெண்களுக்கு தன்னுடைய முட்டையை உபயோகித்து கரு உருவாக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

விந்தணு தரத்தை அதிகரிக்க மருந்துகளும், லாப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையும் உள்ளன. இதைத் தவிர, மிகவும் அதிநவீன (ஐ.எம்.எஸ்.ஐ) முறையினால் விந்தணுவை கணினி (கம்யூட்டர் ஜெனரேட்டர் இமேஜ்) மூலம், 7,000 மடங்கு பெரிதாக பார்த்து மிகவும் சிறப்பான விந்தை தேர்வு செய்யலாம்.

சிறப்பான கருவை உருவாக்கி, அதில் மிகவும் சிறப்பான கருவை தேர்ந்தெடுப்பது எப்படி?

எம்ப்ரியோஸ்கோப் என்பது மிகவும் அதி நவீன கருவி. இந்த இன்குபேட்டரில் கருவை பாதுகாப்பாக வைக்கிறோம். இதில் கேமரா உள்ளதால், கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நிமிட மும் பதிவு செய்ய முடியும். இதனால், வளர்ச்சியில் குறை இருந்தால் அதைக் கண்டுபிடித்து கருப்பையில் செலுத்தும் முன் சிறந்த கருவை தேர்ந்தெடுக்க முடிகிறது. இதனால், கர்ப்பமாகும் வாய்ப்பை, 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.

கர்ப்பப்பையின் உட்புறச் சுவரின் ஒட்டும் தன்மையை அதிகரிப்பதற்கு 'எம்ப்ரியோக்ளு' எனும் பசை உள்ளது. இதைத் தவிர, 'ஹிஸ்டெரோஸ்கோப்பி' மூலம் கர்ப்பப்பையின் உட்பகுதியை நோக்கி ஸ்கிராட்ச் டெஸ்ட் மூலம் சிறு அளவில் சதையை சுரண்டி எடுப்பதால், வளர்ச்சிக் காரணிகள் அதிகரித்து கரு, கருப்பையில் ஒட்டி வளர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதை அனுபவத்தால் கண்டு பிடித்துள்ளோம்.

இவ்வாறு விந்து, கரு, கருப்பை ஆகியவைகளின் ஆரோக்கியம் நவீன சிகிச்சை முறைகளாலும், நவீன சாதனங்களாலும் சிறப்பாக்கப்படுவதால் கர்ப்பமாகும் வாய்ப்பு, 10-20 சதவீதம் அதிகரிக்கிறது. கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு, 10 சதவீதம் குறைகிறது.

பெண்களுக்கு திருமணம் ஆன ஓர் ஆண்டுக்குள் கர்ப்பம் அடையவில்லையென்றால், மருத்துவரை அணுகலாம். முக்கியமாக மாதவிடாய் தாமதமாக இருந்தாலும், மிகவும் வலியோடு இருந்தாலும், தாம்பத்யத்தில் சிக்கல் இருந்தாலும் மருத்துவரை அணுகலாம். முக்கியமாக, 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள், காலம் தாழ்த்தாமல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

டாக்டர் கீதா ஹரிப்ரியா,

பிரசாந்த் குழந்தையின்மை சிகிச்சை மையம்,

சேத்துப்பட்டு, சென்னை. தொலைபேசி எண்:

044- 2836 3113.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us