தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/இனி டாக்டர் வேண்டாம்! வாட்டர் தெரபி போதும்!

இனி டாக்டர் வேண்டாம்! வாட்டர் தெரபி போதும்!

இனி டாக்டர் வேண்டாம்! வாட்டர் தெரபி போதும்!


PUBLISHED ON : மே 17, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதைதான் வாட்டர் தெரபி என்கிறார்கள் டாக்டர்கள். மனித உடலை சீராக வைக்கவும், ஆரோக்கியத்துக்கு வித்திடவும், தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்று. தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கி கொள்வதன் வாயிலாக, முழு ஆரோக்கியம் பெற முடியும்.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது, 5 முதல் 6 டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

இந்த வாட்டர் தெரபியில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வெறும் வயிற்றில், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு, 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த, 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. வாட்டர் தெரபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது.

தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு, சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம். வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில், 1.5 லிட்டர் தண்ணீரை குடிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். போகப்

போக பழகி விடும்.

வாட்டர் தெரபியின் நன்மைகள்:

1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

3. உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.

4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.

5. உடல் சூட்டைத் தணிக்கிறது.

6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.

7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், ஒரே நாளில் மலச்சிக்கல், 2 நாட்களில் அசிடிட்டி, 7 நாட்களில் நீரிழிவு, 4 வாரங்களில் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், 3 மாதங்களில் டி.பி, 10 நாட்களில் வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் கட்டுப்படும்.

தலைவலி, உடல்வலி, சிறுநீரகப் பிரச்னைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, மூலம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்சி உள்ளிட்ட பல நோய்கள் வாட்டர் தெரபியால் காணாமல் போகும்.

இதென்ன புதிய சிகிச்சையாக இருக்கிறதே... வெறும் தண்ணீரை குடித்தால் இவ்வளவு நோய்கள் கட்டுப்படுமா...அப்படியானால் இனி மருந்து, மாத்திரை, டாக்டர்களே வேண்டாம் என்கிறீர்களா...? இன்றே துவக்குங்கள் வாட்டர் தெரபியை... ஆரோக்கியமான வாழ்வு உங்களுக்கு உத்தரவாதம்!

ஒரே ஒரு விஷயம். கிட்னி பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும், டாக்டரின் ஆலோசனை பெற்றபின் சிகிச்சையை மேற்கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us