
பவித்ராவை ஐந்து வயதில் பள்ளியில் சேர்த்த போது, அவளுக்கு என்ன பிரச்னை என்பதை, அவளின் டீச்சர் தான் முதலில் கண்டுபிடித்தார். புத்தகமாகட்டும், கரும்பலகை ஆகட்டும் கண்களுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்ப்பாள். 
'முதலில் ஒரு கண் டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதியுங்கள்' என்ற அவளின் பெற்றோரிடம் அறிவுறுத்தினார். கிட்டப்பார்வை என்று உறுதியாக, ஐந்து வயதில் கண்ணாடி போட ஆரம்பித்தாள். கல்லூரியில் சேர்ந்தபோது தான், கண்ணாடி போட்டிருப்பது அவளின் அழகை குறைத்து காட்டுகிறது; அசவுகாரியமாக இருக்கிறது போன்ற பல பிரச்னைகளை உணர்ந்தாள். இதற்கு மாற்று நிச்சயமாக வேண்டும் என்ற நினைத்தாள்.கிட்டப்பார்வை - 
மயோப்பியா, தூரப் பார்வை - ஹைப்பர்மேட்டிரோப்பியா பிரச்னைகள் என்பது, இன்று பெரும்பாலானோருக்கு இருக்கின்றன. பிறந்த குழந்தையிலிருந்து வயதானவர்கள் வரை, யாருக்கு வேண்டுமானாலும் கண்களில்  இந்தப் பிரச்னை வரலாம். கண்ணாடிக்கு மாற்றாக வந்த சிகிச்சை தான், 'லேசிக் லேசர்' முறை. கடந்த, 20 ஆண்டுகளில்  கிட்டப்பார்வை மற்றும் தூரப் பார்வை குறைபாடை சரி செய்ய, இந்த, 'லேசர்' அறுவை சிகிச்சையிலேயே பல்வேறு மாற்றங்களும், நவீன முறைகளும் வந்துவிட்டன. சமயங்களில் கண்ணாடியே அணிந்து கொள்ளலாம் என்று நினைப்பவருக்கும், அதில் முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவருக்கு, 'சைஆப்டிக்ஸ்' மூலம் முழுமையான தீர்வு கிடைக்கிறது. பார்வைக் குறைபாடு உள்ள, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் லேசர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். எந்தவிதமான லேசர் அறுவை சிகிச்சையாக இருந்தாலும் மருந்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. வெளி நோயாளியாகவே, சில மணி நேரங்களில் சிகிச்சை பெற்று செல்ல முடியும். ஒரு வாரத்தில் இயல்பான எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.லேசர் அறுவை சிகிச்சையில், தற்போது வந்துள்ள நவீன தொழில்நுட்பம், 'ஸ்மைல்!' இதில், 25 வினாடிகள் மட்டுமே லேசர் பயன்படுத்தப்பட்டு, 15 நிமிடங்களில் மிகத் துல்லியமாக, இந்த சிகிச்சை 
செய்துவிட முடியும்.
அகர்வால் கண் மருத்துவமனை, 
9444993130, 944444424

