sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/பெண்களுக்கு அவசியமான ஊட்டச்சத்து அயோடின்!

பெண்களுக்கு அவசியமான ஊட்டச்சத்து அயோடின்!

பெண்களுக்கு அவசியமான ஊட்டச்சத்து அயோடின்!


PUBLISHED ON : டிச 25, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தைராய்டு சுரப்பியின் இயல்பான செயல்பாடு, வளர்ச்சிக்கு அவசியமான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்ய அவசியமான நுண்ணுாட்டச் சத்து அயோடின்.

அயோடின் குறைபாடு இருந்தால், பல வகையான நோய்களுக்கு வழி வகுக்கும். குறிப்பாக கர்ப்ப காலத்தில், குழந்தைப் பருவத்தில், அயோடின் குறைபாடு பல உடல் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். பள்ளி வயது குழந்தைகளின் சராசரி சிறுநீர் அயோடின் அளவு, 10 யுஜி/லி., இருக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு சராசரி சிறுநீர் அயோடின், 150 - 249 யுஜி/லி., இருக்க வேண்டும்.

அயோடின் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளில் குறை பிரசவம், தன்னிச்சையான கருக்கலைப்பு, குழந்தை இறந்து பிறப்பது மற்றும் பிறவி, 'கிரெட்டினிசம்' எனப்படும் மாற்ற முடியாத மனநல பாதிப்பு போன்றவை பிரதானமானவை. இது தவிர, குழந்தைகளுக்கு கற்றல் திறன் குறைபாடு வரலாம்.

அயோடின் குறைபாடுகள் பிறப்பதற்கு முன்பே, கருவிலேயே துவங்கலாம்; குழந்தை பருவத்தில், இளமை பருவத்தில் அயோடின் குறைபாடு, 'ஹைப்போ' தைராய்டு எனப்படும், தைராய்டு குறைவாக சுரக்கும் பிரச்னைக்கு வழிவகுக்கும்.

கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி, பிறந்த பின், ஆரம்ப ஆண்டுகளில் குழந்தையின் வளர்ச்சிக்கும் அயோடின் மிகவும் அவசியம்.

அயோடின் குறைபாடு உள்ள பெண்களுக்கு கருத்தரிப்பதில் சிக்கல் வரலாம்.

தைராய்டு வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் அயோடின் மிகவும் முக்கியமானது. கர்ப்ப காலத்தில் மிதமான அயோடின் குறைபாடும், குழந்தைகளில் நரம்பியல், அறிவாற்றல் குறைபாடுகளுடன் தொடர்புடையது.

அயோடின் குறைபாடு மார்பக புற்றுநோய் அபாயத்தை துாண்டுவதோடு, 'பைப்ரோசிஸ்டிக்' என்ற மார்பகத்தில் சிறு சிறு கட்டிகளை ஏற்படுத்தலாம்.

உடலின் மொத்த அயோடின் தேவையில், 70 - 80 சதவீதம், தைராய்டிற்கு மட்டுமே தேவைப்படுகிறது. தினசரி எடுத்துக் கொள்ளும் அயோடினில் பாதிக்கும் மேல், தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்காக மட்டுமே தேவைப்படுகிறது.

போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியானது ரத்தத்தில் இருந்து அதிக அயோடினை எடுக்க முயற்சி செய்யும்; இதனால், வீக்கம், தொண்டை கரகரப்பு, விழுங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும். போதுமான அயோடின் உட்கொள்ளாவிட்டால், தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறையத் துவங்கும்.

இதனால் சோர்வு, எடை அதிகரிப்பு, மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகள், தலைமுடி உதிர்தல் போன்ற தைராய்டு குறைபாட்டின் அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். தினசரி உணவில், அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பு, அயோடின் இணை உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்.

அயோடின் நிறைந்த மீன், இறால் போன்ற கடல் உணவுகளை சாப்பிடுவதால், போதுமான அயோடின் கிடைக்கும்.

கர்ப்பத்தை திட்டமிடும் பெண்கள், அயோடின் இணை உணவு எடுப்பதற்கு முன், மகப்பேறு மருத்துவர், பொது மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில், உடலுக்குத் தேவையானதை விட அயோடின் அதிகமானால், தைராய்டு பிரச்னைகள், பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.



டாக்டர் வைபவ் சுரேஷ்,

நோய் தடுப்பு நிபுணர்,

போர்டிஸ் மருத்துவமனை,

சென்னை.98402 04444

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us