PUBLISHED ON : டிச 20, 2015
நம் உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களை, மிக எளிதான முறையில் குணப்படுத்தும் முறை யை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நமக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். அவற்றில் மிக முக்கியமானது ஆயில் புல்லிங்'. காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய், சூரியகாந்தி, வேர்க்கடலை, ஆலிவ், தேங்காய் எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணெயை, இரண்டு தேக்கரண்டி வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளில் ஊடுருவிச் செல்லுமாறு, நன்கு கொப்பளிக்க வேண்டும்.
இப்படி, 15 முதல், 20 நிமிடங்கள் வரை, தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும். முதலில் வாய் முழுவதும் வழுவழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி, வாயினுள் எளிதாக நகரும். எண்ணெயின் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விட வேண்டும். இதுவே ஆயில் புல்லிங்.
இவ்வாறு தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற கடுமையான வலிகள், நோய்கள் தாக்குவதில்லை என்று மருத்துவர்களே கூறுகின்றனர். இதன் மூலம், பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்று நோய்களிலிருந்து முதலில் விடுதலை பெறலாம்.
கண், காது, மூக்கு மற்றும் நுரையீரல் நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, மூட்டு வலி, முழங்கால் வலி, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தலாம்.
குறிப்பாக, பல் தொடர்பான பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக ஆயில் புல்லிங் உள்ளது. அனைவரும் பின்பற்றலாம்.

