PUBLISHED ON : ஜன 25, 2026

அவசியமே இல்லாமல், மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை, 'டிரக் அபியூஸ்' என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். 'ஜாயின்ட் அபியூஸ்' என்று கேள்விப்பட்டது உண்டா?
உடம்பின் மொத்த எடையையும் தாங்கும் மூட்டுகளை, பிரச்னை வரும் வரை கவனிக்காமல் இருப்பது தான் ஜாயின்ட் அபியூஸ்.
பழங்காலத்தில் குழந்தை பருவத்தில் இருந்தே எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருந்தது. 30 - 40 ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட இப்பழக்கம் இருந்தது. 1990ம் ஆண்டுகளில் பிறந்தவர்கள் வரை இதை கடைப்பிடித்தனர்.
ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதை சிலர் மட்டுமே செய்கின்றனர்; உடல் முழுதும், குறிப்பாக கால் முட்டி, கணுக்கால், தோள் பட்டை, இடுப்பு உட்பட எல்லா மூட்டுகளிலும், வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெயை லேசாக சூடுபடுத்தி, தேய்த்து குளிக்க வேண்டும்.
அதிக உடல் உழைப்பு இல்லாவிட்டாலும், மூட்டு களை ஆரோக்கியமாக பராமரிக்க இது உதவும். செரிமானக் கோளாறுகள், காய்ச்சல், மார்பு சளி, தொற்று பாதிப்பு இருந்தால், எண்ணெய் தேய்த்து குளிப்பது கூடாது. இவை குணமான பின் செய்யலாம்.
மூட்டுகளில் தேய்மானம், வலி இருந்தால், சிலர் நீண்ட நேரம் நின்று வேலை செய்வர். அடிக்கடி படிக்கட்டுகளில் ஏறுவது, நீண்ட துாரம் பயணம் செய்வது, மலையேறுவது, நடைபயிற்சி போன்றவற்றை செய்தால், மூட்டு வலி சரியாகி விடும் என்று நினைக்கின்றனர். இது சரியல்ல.
மாலையில் உடற்பயிற்சி செய்பவர்கள், அன்று காலை எல்லா மூட்டுகளி லும் எண்ணெய் தேய்த்து, அதிக பட்சம் அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம். இது, பயிற்சிகள் செய்வதற்கு முன், மூட்டுகளுக்கு தேவையான பலத்தை தரும்.
@block_B@ டாக்டர் ஹரிகிருஷ்ணன், ஆயுர்வேத மருத்துவர், சென்னை. 89399 33150 healerhari@gamil.com@@block_B@@

